January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும்!

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைகளை மேலும் நசுக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சங்கள்:

புதிய அரசியலமைப்பு – ஒரு கவலைக்குரிய சூழல்

இலங்கையில் அதிபர் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசு, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இது மீண்டும் ஒரு ‘ஒற்றையாட்சி’ முறையை வலுப்படுத்தி, தமிழர்களின் அரசியல் சுயாட்சி மற்றும் அடையாளத்தைச் சிதைக்கும் வகையில் அமையக்கூடும் என முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.

 திம்பு கோட்பாடுகளின் முக்கியத்துவம்!

தமிழ் மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய, பின்வரும் அடிப்படை உரிமைகளை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்:

தமிழர் தேசியம்: இலங்கைத் தமிழர்களுக்கான தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல்.

தமிழர் தாயகம்: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது.

தன்னாட்சி உரிமை: தமிழ் மக்களுக்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல்.

கூட்டாட்சி முறை: மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உட்பட, அனைவருக்கும் சமத்துவம் வழங்கும் கூட்டாட்சி முறையை நிறுவுதல்.

இந்தியாவின் தார்மீகக் கடமை

“கடந்த 77 ஆண்டுகளாகத் திட்டமிட்ட பாகுபாடு மற்றும் வன்முறையைச் சந்தித்து வரும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உள்ளது. 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிராந்திய அமைதியை நிலைநாட்ட இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் கோரிக்கை:

இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளை நடத்தி முறையான அதிகாரப் பரவலாக்கம்.சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் கூட்டாட்சி முறை. ஆகியவற்றை உறுதி செய்ய இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரமும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது ஒட்டுமொத்த தமிழினத்தின் விருப்பமாகும்

Loading

About The Author