வடக்கின் மாண்புறு சத்திரசிகிச்சை நிபுணர்
– பேராசிரியர் வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் ரவிராஜ்
இலங்கை முழுவதும் நன்கு அறியப்பட்டவரும் வடக்கு மாகாணத்தின் முதன்மை சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் ரவிராஜ்போர் நெருக்கடிகள் சூழ்ந்தி ருந்த காலப்பகுதியில் எமது தாயகப் பிரதே சத்தில் தங்கிநின்று மக்களுக்கு சேவையாற்றிய மகத்தான மருத்துவர்களுள் முதன்மையானவர். மருத்துவத் துறை சார்ந்து அவரது வகிபாகம் பன்மைத் துவ பரி மாணம் மிக்கது. சத்திரசிகிச்சை நிபுணர், பேராசிரி யர், போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர், இலங்கை மருத்துவ பேரவையின் செயற்குழு உறுப்பி னர், மருத்துவக் கற்கைக ளுக்கான உயர் பட்டப்படிப் புகள் நிறு வனத்தின் சபை உறுப்பினர், சத்திர சிகிச் சைத்துறைசார் உயர் பரீட்சைக ளின் பரீட்சகர், மருத் துவ பீடத்தின் பீடாதிபதி என அவரது வாண்மைத் துவ வகிபாகங்களும் தலமைத்துவ வகிபாகங்களும் நீண்ட வரிசையைக் கொண்டன.
தமிழர்கள் மத்தியில் தம்மை அர்ப் பணித்து வாழ்ந்த வைத்திய நிபுணர்கள் பலர் வரலாற்றில் இடம் பிடித் துள்ளனர்.அவர்கள் எல்லோர் மத்தியிலும் சத்திரசி கிச்சைப் பேராசிரியர் ரவிராஜ் தனித்த அடையாளம் கொண்டவராக திகழ்கின்றார். மருத்துவத்துறை சார்ந்த சிகிச்சையியல், கற்பித்தல் மற்றும் நிர் வாகம் என மூன்று தளங்களில் தனது தடத்தை ஆழமாக பதிந்திருக்கின்றார் பேராசிரியர் அவர்கள். அதற்கும் அப்பால் அவரது இலகுவாக சமூகமயமாகும் தனித்து வக் குணம் அவரை இன் னும் வேறுபடுத்திக்காட்டும் பண்பு மிக்கது. பல சமூக மட்ட அமைப்புக்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு எவர்க்கும் எளியனாக வும் அணுகுவதற்கு இலகுவான மனிதராகவும் அவர் இருப்பது அவருக்கேயுரித்தான தனி அடையாளம்.
பேராசிரியர் ரவிராஜ் அவர்கள் 1959ஆம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி சுன்னாகத்தில் நன்கு அறியப் பட்ட மருத்துவர் சுப்பிரமணியம் மற்றும் இரட்ண மணி தம்பதிகளின் ஏகபுதல்வனாக பிறந்தார். தந்தையா ரின் பணி நிமிர்த்தம் அனுராதபுரத்தில் முன்பள்ளிக் கல்வியைக் பெற்றுக் கொண்டபேராசிரியர் அவர்கள் பின் னர் தமது பூர்விக இடத்துக்கு திரும்பி உடுவில் மகளிர் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் கற் றார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வி மற்றும் உயர்தரத் தைக் கற்று அங்கிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்க ழக மருத்துவ பீடத்துக்கு தெரிவானார். யாழ்ப்பா ணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத் தின் இரண் டாவது அணி மாணவராக 1979 இல் இணைந்து கொண்டஅவர் 2015ஆம் ஆண்டு அதே பீடம் பிரச வித்த மாணவன் ஒருவர் அப் பீடத்தின் பீடாதிபதியா கும் வரலாற்றுச் சந்தர்பத் தின் வழி மருத்துவபீடத் தின் பீடாதிபதியாகினார். இரண்டு தடவைகள் போட் டியின்றி மருத்துவபீட பீடாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட அவர் 2021 வரைபீடாதிபதிக் கட மைளை ஆற்றினார்.
மருத்துவபீடத்தில் கல்விகற்கும் காலத்தில் மிக வும் துடிப்புள்ளவரகவும் ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய பேராசிரியர் அவர்கள் பேராசி ரியர்கள் கருணை நாதன், வேற் பிள்ளை மற்றும் சிறிஸ்கந்த வர்மன் ஆகியோரிடம் சத்திரசிகிச்சைக் கல்வியையும் வைத்திய நிபுணர் கள் திருமதி. எஸ்.கணேச மூர்த்தி, சிறிகரன், நாகேஸ் வரன் மற்றும் ரஞ்சதயாளன் ஆகியோரிடம் சிகிச்சை மருத்துவவியல் கற்கை களையும் பயின்றார். பேராசிரியர்கள் சிவசூரியா மற்றும் தயா ளசேகரன் ஆகியோரிடம் மகப்பேற்று
பெண் நோயியல் கல்வியையும் பேராசிரியர் இராம தாஸ் மற்றும் வைத்தியர் வாம தேவன் ஆகியோரி டம் குழந்தை வைத் தியக் கல்வியையும் கற்றார்.
1984ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு மேல் சித்தி யுடன் தனது மருத் துவப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த பேராசிரியர் அவர்கள் 1985 ஆம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத் தியசாலையில் தனது மருத்துவ உள்ளகப் பயிற்சிக்காக இணைகின் றார். இதுவே அவரது வாழ்வின் திருப்பு முனையான காலம். அங்கு சத்திரசிகிச்சை நிபுணர் பொன்னம்ப லம் மற்றும் பொது வைத்தியநிபுணர் ஜேம்ஸ் ஆகி யோரி டம் பயிற்சி பெற்றார். அரசாங்க மருத்துவ ராக இணைந்த பின்னர் பேராசிரியர் கருணைநாதன் வைத்திய அநிபுணர்கள் கணேசரட்ணம், பொன்னம்ப லம் மற்றும் சேவியர் ஆகியோரின் கீழ் சிரேஸ்டவிடு திப் பொறுப்பு வைத்தியராகப் பணியாற்றினார்.
சத்திரசிகிச்சைநிபுணர் பொன்னம் பலத்திடம் அவர் பெற்றுக் கொண்ட பயிற்சியும் வழிகாட்டலும் சத்திரசிகிச்சையியல் துறைசார்ந்த ஆர்வத்தை
தோற்றுவிக்க அந்தத்துறை சார்ந்த பட்டப் பின் படிப்பைத் தொடரும் முயற்சியில் வெற்றிபெற்ற பேராசிரியர் ரவிராஜ் அவர்கள் யாழ்ப்பாணத்தின்
முதலாவது சத்திரசிகிச்சையியல் பதிவாளர் எனும் தகமையைப் 1997 இல் பெற்றுக் கொண்டார். அந்தத் தகமையுடன் திறன் வாய்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் கணேசரட்ணத்தின் கீழ் தனது சத்திரசிகிச்சைப் பயிற் சியைப் பெற்றுக் கொண்டார். தனது வெளிநாட்டுப் பயிற்சியை அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் நிறைவு செய்த அவர் அதன் பின்னர் யாழ்ப்பாணம்
போதனாவைத்திய சாலையின் சத்திரசிகிச்சை நிபுராக 1999ஆம் கடமையாற்றத் தொடங்கி 2024 இல் ஓய்வு பெற்றார்.
போர் நெருக்கடிகள் மிகுந்த காலப் பகுதியில் பொருளாதாரத் தடைகள், மருத்துவ உபகரணங்க ளின் பற்றாக் குறை, மருந்துகளுக்கான கட்டுப்பாடு
மற்றும் தட்டுப்பாடு, நிர்வாகரீதியான இரட்டைச் சூழல், தொலைத் தொடர்பு வசதி கள் இன்மை என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நின்று தனது
அயராத சேவையை வடக்கு மக்க ளுக்கு வழங்கினார்.
அதிலும் தகுதி வாய்ந்த மருத்துவ நிர் வாகிளுக்கு பற் றாக்குறை யான அக் கால கட்டத்தில் 2005 தொடக் கம் 2007 வரை போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். அதன் பின் னர் 2012 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்து வபீடத்தின் சத் திரசிகிச்சையியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையா ளராக இணைந்து கொண்ட அவர் பின்
னர் துறைத் தலைவர் மற்றும் இரண்டு தடவைகள் மருத்துவ பீடாதிபதிஎனும் தகமைகளைப் பெற்றார்.
நிறைவில் சத்திரசிகிச்சைத் துறை யின் இருக்கைப் பேராசிரியராக நியமனம் பெற்றார். அவரது தலமைத் துவம் மருத்துவபீடத் தின் மற்றுமொரு மறுமலர்ச்சிக் கால மாக அமைந்தது. பீடம் தன்னை பௌதி கவள ரீதியாக மேம்படுத்திக் கொண்டது.
நாற்பதுஆண்டுகளுக்கும் மேலான மருத்துவக் கல்விஅனுபவத்தில், இலங்கையின் பலபகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டப்படிப்புமற்றும் மேற்ப டிப்பு மாணவர்களை பயிற்றுவித்து வழிநடத்தி உள் ளார். கொழும்புப் பல்கலைக்கழகத் தின் மருத்துவக் கற்கைகளுக்கான பட் டப்பின் படிப்பு நிறுவனத்தின் (PGIM) பயிற்றுநர், பரீட்சகர், பாடத்திட்ட வடிவ மைப்பாளர் மற்றும் ஆய்வுவழி காட்டியாககடந்த 23 வருடங்களாகச் செயற்படுகின்றார். பொது அறுவைச் சிகிச்சை பட்டபபின் படிப்பு பாடத் திட்டங்களை உருவாக்கி, பல சத்திரசி கிச்சை நிபணர்களையும் அவர்களது ஆய் வுகளையும் மேற்பார்வை செய்துள் ளார். மருத்துவப் பட்டப்படிப்பு சார்ந்துதிறன் அடிப் படையிலான மதிப்பீடுகள் போன்ற நவீனகற்பித்தல் – மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்தினார். சத் திரசிகிச்சை, காயப்பராமரிப்பு, மருத்துவக் கல்விமற் றும் பாடத்திட்ட மேம் பாடுதொடர்பான 15க்கும் மேற்பட் ட துறைகளில் வளவாளராகப் பங்கேற்றுள் ளார்.
மருத்துவத்துறைசார்ந்த ஆய்வுத்து றையிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள் ளார்.முழுமை யான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஆய் வுச் சுருக்கங்கள் உட்பட 55 ஆய்வு வெளியீடு களை வெளியிட்டுள்ளார். பல் வேறு தேசிய மற்றும் சர்வதேச மாநாடு களில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளதுடன் பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான மூன்று சத்திரசி கிச்சை துறைசார் பாடநுல்கள், சமூகசுகாதார விழிப்புணர்வுக்கான ஆறு நூல்களையும் எழுதியுள்ளார்.மேலும் இலங்கை சத்திரசிகிச்சையாளர் கல்லூரி வெளியிட்ட History of Surgery உள்ளிட்ட ஐந்து மருத்துவ நூல்களில் அத் தியாயங்களையும் அவர் எழுதியுள்ளார்.
பல்வேறுநிறுவனங்களின் வளர்ச்சி யிலும் அவர் முக்கியபங்கு வகித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்க ழக மருத்துவகட்டிடம், 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமதிப்புள்ள அறுவைச் சிகிச்சை உபகரணங்கள், பத்துமாடிகள் கொண்ட சிகிச்சையியல் ஆய்வுக் கட்ட டம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ, கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளின் மேம்பாட்டில் அவர் நேரடி யாக ஈடுபட் டுள்ளார். இங்கிலாந்தின் சத்திரசிகிச் சைக்கான றோயல் கல்லூரி மற்றும் சிங்கப்பூர் சுகா தார சேவைகள் ஆகிய வற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந் தங்க ளைஏற்படுத்தி, இலங்கை மருத்துவர்களுக் கான சர்வதேசபயிற்சிமற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரி வுபடுத்து வதில் தனது பங்களிப்பை நல்கியுள்ளார்.
தேசிய அளவில், இலங்கை மருத்து வசபையின பலகுழுக்களில் பணியாற்றி, தொழில்முறை ஒழுக்கம், உள்ளகப் பயிற்சி மற்றும் வெளிநாட்டு மருத்துவ
பீடங்களின் அங்கீகாரம் தொடர் பான பணிகளில் பங்களித்துள்ளார். மேலும் யாழ்ப்பாண மருத்துவ சங்கம், இலங்கை சத்திரசிகிச்சையாளர் கல்லூரியின்
யாழ்ப்பாணக் கிளை, அரசாங்க மருத்துவ அதிகாரி கள் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை, மற்றும் யாழ்ப் பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இருந்து பல கல்வி அமர்வுகள், வேலைப்பட்டறைகள் மற்றும்
மாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளார்.
அவரது சேவைகளுக்கான அங்கீகா ரமாக, 2014 ஆம் ஆண்டு “சிறப்பு சேவைக்கான” இலங்கை சத்திர சிகிச் சையாளர் கல்லூரி விருது, யாழ்ப்பாண மருத்து வபீடபழையமாணவர் விருது கள், புனித ஜோன்ஸ்
ஆம்புலன்ஸ் சேவைபதக்கங்கள் உள்ளிட்ட பல கௌர வங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவத்துறைசார் உத்தியோக பூர்வ ஓய்வுக்குப் பின்னரும் ஓயாதுச மூக நன்மை கருதி உழைக்கும் மனித ராகஅவர் என்றும் திகழ்கிறார். வடக்கு மருத்து வத்துறையில் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவிராஜ் அவர்கள் என் றும் தவிர்க்கமுடியாத ஆளுமையாக காலத்தால் என்றும் நினைவுகொள் ளப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
