உறக்கம் கொண்டு வாழ்க்கையில்
ஆழ்ந்து நீ தூங்காதே
அன்பான வாழ்க்கையினை
அமைதி இழந்து போக்காதே
தத்துவத்தும் தனித்துவம் நித்தமும் பலன்தரும்
நீ உணந்து வாழ்திட அது நல்ல வழிதரும் !
சொத்துக்கள் சேர்த்து வை
சொந்தத்தை பேணி நில்
சுழன்றோடும் காலத்தில்
அகன்றோடும் வாழ்க்கை
அனுபவப் பள்ளியில் கற்றிடும் வாழ்க்கை
கற்றலும் தேவை நல் கவனமும் தேவை
பலன் தேடி வருவார்கள்
பகட்டுக்காய் நடிப்பார்கள்
புறம்பேசி நிற்பார்கள்
பொல்லாமை உரைப்பார்கள்
அறம் இல்லா வாழ்க்கை
வாழ்வோரின் நிலை தன்னின்
நீலைகளைஅறிந்து-நீ
வாழ்வதில் சிறந்து நில் கற்றதில் அறிந்து ;
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (17.01,2026)
![]()

More Stories
வருங்கால இளைஞரே நீ எழுக?
காதலே! உயிர் மூச்சாகி
அருள்தருவாய் முருகா!