January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

அதிரடிப்படை சீருடையை ஒத்த ஆடை அணிந்த இளைஞன் கைது!

அதிரடிப்படை சீருடையை ஒத்த ஆடை அணிந்த இளைஞன் கைது!

யாழ்ப்பாண நகரின் முக்கிய பகுதியில், காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் (STF) சீருடையை ஒத்த ஆடையை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக, விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தும் அதே நிறம் மற்றும் வடிவமைப்பைக் கொண்ட காற்சட்டையை (Camouflage Pant) அணிந்து நடமாடிய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், அவரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 இலங்கையில் இராணுவம் அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தும் சீருடைகள், முத்திரை (Logo) அல்லது அவற்றை ஒத்த வடிவமைப்புகளைக் கொண்ட ஆடைகளை பொதுமக்கள் அணிவது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறான ஆடைகளை அணிந்து தவறான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க இச்சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. பொதுமக்களைத் திசைதிருப்பும் வகையில் அல்லது பாதுகாப்பு தரப்பினரைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் ஆடை அணிவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

Loading

About The Author