நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு கர்நாடக வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம் கடந்த 9.11.2025 ஞாயிறன்று இடம்பெற்றது. கனடாவில் பிறந்த வளர்ந்த இளம் இசையாசிரியையான திருமதி வாரகி விஜயராஜாவின் மாணவியான செல்வி விஷ்ணா திரவியராஜ் அவர்களின் இசையரங்கம் ஸ்காபுறோ ஆர்மேனியன் கலையரங்கில் இடம்பெற்றது.
இந்த அரங்கேற்றத்திற்கு அணிசெய் கலைஞர்களாக வயலின்- கலைப்பிரதீபா ஜெயதேவன் நாயர், , மிருதங்கம்- கௌரிசங்கர் பாலச்சந்திரன், கடம்- மிருந்தங்க வித்தகர் மயூரன் தனஞ்சயன் ஆகியோரோடு செல்வி அபர்ணா குழந்தைவேலு ஆகியோர் மேடையில் அரங்கேற்றத்தை நேர்த்தியாக நகர்த்திச் செய்ய பக்கபலமாக விளங்கினார்கள். அங்கு நடுநாயகமாக விளங்கினார் அரங்கேற்ற நாயகி செல்வி விஷ;ணா.
மிகக் கம்பீரமாக அவரது இசை பிரவாகித்தமையைச் சபையோர் மிக அமைதியாக இரசித்து மகிழ்நதனர் என்பது எனது அவதானிப்பாக காணப்பட்டது. சபையோர் பார்வையாளர்கள் களரிக்கு அனுமதிக்கு முன்னராகவே அரங்கேற்றம் சிறப்புடன் நடைபெறுவதற்கான பூஜை மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றன.
இவ்விழாவைச் சிறப்பான நெறிப்படுத்தி மேன்மைப்படுத்துவதற்காக சிறப்பு விருந்தினர்hக அழைக்கப்பட்ட ‚அன்பு அறிவிப்பாளர்‘ பி.எச். அம்துல்கமீட் அவர்கள் அறிமுகப்படுத்தி நெறிப்படுத்தினார். விஷ்ணாவின் சகோதரி அனைவரையும் வரவேற்று உரையாற்றியதோடு பி.எச். அப்துல்கமீட் அவர்களையும் அறிமுகப்படுத்தியதோடு அவர் மிகச் சுருக்கமாகவும் தெளிவாககும் இசைக்கலைஞர்களையும், அரங்கேற்றச் செல்வியையும் சபைக்கு அறிமுகம் செய்துவந்தார்.
அப்துல் ஹமீட் அவர்கள் தனது ஆரம்ப உரையில் மிகச் சுருக்கமாக இசையின் தொன்மைபற்றி எடுத்துரைத்தார் அரங்கச் செல்வி விஷ;ணா திரவியராஜ் தனது இசைப் பயணத்தை இசை ஆசிரியையும் ரொறன்ரோ மருத்துவ மனையில் உளவியல் மேற்பார்வையாளராகவும் பணியாற்றி வருகின்றார். அவர் தனது இசைப் பயணத்தைப் பிரபல இசை, நடன வித்தகர் ஸ்ரீமதி அழகானந்த நாத் அவர்களிடமும் அன்றைய பிரம விருந்தினராகக் கலந்துகொண்டுள்ள இசையாசிரியை ஸ்ரீமதி சுகல்யா ராஜி கோபாலகிருஷ;ணன் அவர்கிடம் மட்டுமன்றிப் பல்வேறு பிரபல இசை மேதாவிகளான ரி.என். சேசகோபாலன், ஓ.எஸ்.தியாகராஜன் போன்றோரிடம் தன்னை இசையால் வளப்படுத்திக்கொண்டவர். இவ்வித மேன்மைகளைப் பெற்றுக்கொண்ட இளம் இசை ஆசிரியையை இனங்கண்டு பெற்றோர்களான திரு.திருமதி ஜெயந்தினி திரவியராஜ் தம்பதியினர் தங்கள் செல்வ மகளை ஒப்படைத்ததன் விளைவாக இன்று அதன் அறுவடையைக் கண்டு பூரித்து நிற்பதைக் காணமுடிந்தது.
இசை அரங்கம் பைரவி இராகத்தில் அமைந்த வர்ணத்தோடு ஆரம்பித்து ஹம்சத்துவனியில் அமைந்த கருணை செய்வாய் என்னும் பாபநாசன் சிவனின் கீர்த்தனத்தையும், ஹணமூர்த்தி என்னும் இராகத்தில் அமைந்த கணமுர்த்தே என்னும் ஜெகராஜா அவர்களின் கீர்த்தனத்தையும், பூர்வ கல்யாணியில் அமைந்த ஆனந்தநாட்டியம் ஆடுவாய் என்னும் நீலகண்ட சிவனின் கீர்த்னத்தைத் தொடர்ந்து சுத்த சந்நியாசியில் அமைந்த ‚நாராயண நின் நாமடே‘ என்னும் புரந்தரதாசரின் கீர்த்தனையைத் தொடர்ந்து காம்போதி இராகத்தில் அமைந்த ‚காணக் கண் கோடி வேண்டும்‘ என்னும் பாபநாசன் சிவனின் கீர்த்தனத்தையும். ஆதனைத் தொடர்ந்து அந்தோலிக இராகத்தில் அமைந்த ‚சேவிக்க வேண்டும் ஐயா‘ என்னும் முத்துத்தாண்டவரின் கீர்த்தனையோடு தனி ஆவர்த்தனம் மிகச் சிறப்பாக மிருதங்கமும் கடமும் போட்டிபோட்டு மண்டபம் அதிர ஒலியெழுப்பியதைத் தொடர்ந்து இராகம் தானம் பல்லவி கிந்தோழத்தில் இசை ஆசிரியர் திருமதி வாரகி விஜயராசா அவர்களால் அமைக்கப்பட்டு சிறப்பாக நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து சாம இராகத்தில் அமைந்த ‚வருவாரே‘ என்னும் கோபால கிருஷ;ண பாரதியாரின் கீர்த்னத்தை மிகச் சாதாரணமாக ஒரு சங்கீத வித்துவானைப் போன்று சபையோரும் இசையால் மகிழத்தந்த செல்வி விஷ்ணா தொடர்ந்து ஜோன்புரி இராகத்தில் அமைந்த ‚ஆசை முகம்‘ என்னும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கீர்தனத்தை மிக லாவகமாக எமக்களித்தார்
. தொடர்ந்து மதுவந்தியிலமைந்த ‚கண்ட நாள் முதலாய்‘ என்னும் கீர்த்தனத்தைத் தொடர்ந:து பெஹாக் ராகத்தில் அமைந்த லால்குடி ஜெயராமனின் ‚தில்லான‘ மிக லாவகமாக நீண்ட சங்கதிகளோடு இசைத்ததை அவதானிக்கவும் இரசிக்கவும் முடிந்தது.
தொடர்ந்து திருப்புகழோடு இசையரங்கம் முடிவுற்றது.
அதனைத் தொடர்ந்து பக்கவாத்திய இசைக்கலைஞர்களை இசையரசி விஷ்ணாவும் பெற்றோரும் சகோதரிகளும் இணைந்து பொன்னாடைபோர்த்தியும் அன்பளிப்புகள் வழங்கியும் கௌரவித்தனர். தொடர்ந்து முன்னைநாள் கொத்தணி அதிபர் .த.சிவபாலு அவரகள் வாழ்த்துப் பா மடலை வாசித்துக் கையளித்துப் பாராட்டியதைத் தொடர்ந்து அன்பு அறிவிப்பாளர் ஜனாப் அப்துல் கமீட் அவர்கள் கௌரவம் செய்யபடப்டதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் ஸ்ரீமதி சுவர்ண சுகல்யா ராஜி கோபாலகிருஷ்ணன் அவர்கது சிறப்புரை இடம்பெற்றது. .இசைச் செல்வி விஷ்ணா ஒவ்வொரு கீர்த்தனத்தையும் எவ்வாறு சிறப்பாக பாடினார் என்பதையும் அதற்காக அணி இசைதந்த அனைத்துக் கலைஞர்களையும் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய அரங்கேற்றத்தின் மையப்புள்ளியாக அமைந்த இசை ஆசிரியை திருமதி வாரகி விஜயராஜா அவர்கள் தனது மாணவியைப் பற்றியும் தனது குருவைப்பற்றியும் தன்னை முன்னிலைப்படுது;திய பெற்றோருக்கும் நன்றி கூறியதோடு தன்னிடம் துணிந்து விஷ் ணாவை ஒப்படைத்த பெற்றோரையும் நன்றிகலந்த அன்போடு நினைவிருத்தி உரையாற்றினார். தொடர்ந்து விஷ;ணா அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இசைச் செல்வி விஷ்ணாதனது நான்காவது வயதில் ஆரம்பித்த இசைப் பயணம் 15 ஆண்டுகளின் பின்னர் சபையோரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட நிறைவாக இந்த அரங்கேற்ற நிகழ்வு காணப்பட்டது
————–த.சிவபாலு பி.எட்.சிறப்பு, எம்.ஏ
