
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக் கிளையின் மாபெரும் பரிசளிப்பு விழா 15.02.2026 அன்று மிகச் சிறப்பாக பிரித்தானியாவின் கெய்ஸ் பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவிலே அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கும், சாதனையீட்டிய மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழின் பெயரால் ஒருமித்த பெரும் மக்கள் திரட்சியை காணமுடிந்தது.
வளர்தமிழ் பொதுத்தேர்வில் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அதிதிறன் எடுத்த மாணவர்கள், மற்றும் தமிழ்த்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், அத்துடன் வளர்தமிழ் 10, 11, 12 நிறைவு செய்த மாணவர்கள் என மதிப்பளிக்கப்பட்டனர். மொத்தமாக *1,292* பரிசில்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கடின உழைப்பை மதிப்பதோடு அவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் இவ்விழா அளித்தது.
மற்றும், புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழியை மனநிறைவுடனும், ஆர்வத்துடனும், பெருவிருப்புடனும் கற்பித்து வரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புப் பணியைப் பாராட்டி அவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது. மண்டபம் நிரம்பிய மக்களுடன் வெகு சிறப்பாக இந்நிகழ்வு
நடைபெற்றது எம்மொழிக்கான பெரு வெற்றியாக எம்மால் உணர முடிந்தது.
