
நீதி இன்றி அமைதி இல்லை: சுவிஸ் அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையிலான 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதிக்காக ஒரு வலுவான குரல் எழுப்பப்பட்டுள்ளது. ![]()
மார்ச் 2026-ல் சுவிஸ் பெடரல் கவுன்சிலர் இக்னாசியோ காசிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தில், வெறும் கைகுலுக்கல் நிகழ்வுகளோடு நின்றுவிடாமல்:
வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி கிடைக்க வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுவிஸ் அரசு மௌனம் கலைக்க வேண்டும்.
புலம்பெயர்ந்து வாழும் இளைய தலைமுறையினர் முன்னெடுக்கும் இந்த முக்கியமான மனுவில் (Petition) நீங்களும் இணைந்து ஆதரவு தாருங்கள். நீதியுடன் கூடிய அமைதிக்காக ஒன்றிணைவோம்! ![]()
