யுத்தம்நடந்தபோது ஸ்ரீலங்கா அரசிற்கு முற்றுமுழுதாக துணை நின்ற ஐநா யுத்தம் முடிவடைந்த பின்னர் இனஅழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக்கூறலை ஒப்படைத்துக்கொண்டு வருவது என்பது மிகவும் ஏமாற்றகரமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் செம்மணி புதைகுழிக்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டபோராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்துஇஇனப்படுகொலைiயும் மேற்கொண்டுவந்து அதன் உச்சகட்டமாக 2009ம் ஆண்டு ஒருஇலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளினாலே மிகக்கொடுரமான முறையிலே கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள்.
உணவுதடை மருந்துதடை போன்றவற்றையும் பயன்படுத்தி அந்த இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் 1980களின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்களும் யுவதிகளும்இ ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவ குழுக்களாலும் கடத்தப்பட்டும் கைதுசெய்யகப்பட்டும் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்.
1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் பின்னர் யாழ்ப்பாணம் சந்திரிகா குமாரதுங்க அரசினால் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்மாவட்டத்தில் பின்னர் பெருமளவு இளைஞர்களும் யுவதிகளும்இகாணாமலாக்கப்பட்டார்கள். இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
செம்மணியிலேயே 100க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்இ இவை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு மிகக்கொடுரமாக சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்டஇபாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த இனப்படுகொலைக்கும் இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களிற்கும் இந்த உள்ளகபொறிமுறை மூலம் நீதி கிடைக்காது என்பது தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடு.
அதனால் எங்களிற்கு இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும்இ போர்க்குற்றங்கள்இ மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்இஇன அழிப்பு குற்றங்களிற்காக ஒரு சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும்.அது தொடர்பான ஒரு தீர்மானம் ஐநாவின் பொதுச்சபையிலே நிறைவேற்றப்படவேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐநா மனித உரிமை பேரவையில் 2012ம் ஆண்டு முதல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் இந்த தீமானங்கள் முற்றுமுழுதாக உள்ளக விசாரணையை வலியுறுத்துகின்ற தீர்மானமாகவே இருந்து வந்திருக்கின்றது.அதன் காரணமாக கடந்த 15 வருடங்களில் தமிழ் மக்களிற்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.
யுத்தநடந்தபோது ஸ்ரீலங்கா அரசிற்கு முற்றுமுழுதாக துணை நின்ற ஐநா யுத்தம் முடிவடைந்த பின்னர் இனஅழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக்கூறலை ஒப்படைத்துக்கொண்டு வருவது என்பது மிகவும் ஏமாற்றகரமான விடயம்

