கடந்த 24 மணி நேரத்தில் 40 ஹிஸ்புல்லா போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுதளங்கள் உட்பட ஹிஸ்புல்லாவின் பல இராணுவத் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வரும் இஸ்ரேலிய தரைப்படைகள், ஹிஸ்புல்லாவின் ஒரு குழுவை அடையாளம் கண்டு அழித்ததாகவும், ஹிஸ்புல்லாவின் விரிவான உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அது மேலும் கூறுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலின் கடற்படை தெற்கில் உள்ள ஒரு ஆயுதக் கிடங்கையும் தாக்கியதாக அது தெரிவித்தது.
மொத்தத்தில், கடந்த 24 மணி நேரத்தில் வான், கடல் மற்றும் தரை வழியான தாக்குதல்கள் மூலம் 40க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.