கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஈரான் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் தற்போது பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது வாரமாக நடந்து வரும் இந்த போராட்டங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் ஈரான் மதத் தலைமைக்கே சவால் விடும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போராட்டங்களில் நடைபெறும் வன்முறைக்கு, கலவரக்காரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படும் சீர்குலைப்பு சக்திகளே காரணம் என ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் போராட்டங்கள் மேலும், பொருளாதார பிரச்சினைகளை முன்வைத்து தொடங்கிய போராட்டங்களை ஆயுதம் ஏந்திய குழுக்கள் கைப்பற்றி வன்முறையாக மாற்றியுள்ளதாகவும் ஈரான் கூறுகிறது. இந்நிலையில், ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரான் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
![]()

More Stories
காசா அமைதி சபைக்கு டொனி பிளேயர் மற்றும் மார்கோ ரூபியோ நியமனம்
அமெரிக்கா எச்சரிக்கை சீனக் கார்கள் கனடாவுக்குள் அனுமதிப்பதற்கு கனடா வருத்தப்படும்
ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை ..