
பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி , மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் யாழ். மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்துள்ளனர்
மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலரை சந்தித்த குழுவினர் , வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் பாதுகாப்பு தரப்பினரின் வசமுள்ள காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மகஜரை கையளித்துள்ளனர்.
அதேவேளை , “மக்களின் காணிகள் மக்களுக்கே .. ” என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் , சித்திரை புத்தாண்டுக்கு முன்பாக வலி. வடக்கில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க , நிகழ்வொன்றில் உரையாற்றும் போது , சில அரச அதிகாரிகளின் அசமந்த போக்குகளும் காணி விடுவிப்பு தாமதிக்க காரணமாக உள்ளதாக தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
