ஈழத் தமிழினம் இடருறும் வேளைகளில் ஆபத்பாந்தவர்களாக பலரை காலம் அவ் வப்போது அனுப்பிவைப்பதனாலேயே இவ் இனம் இன்றளவும் பெருமை குன்றாது தன் தனித்துவத்து டத்துடன் திகழ்கின்றது. அவ்வாறு இருபத்தோராம் நூற்றாண்டில் ஈழத்தமிழர்களின் காப்பரணாக காலத் தால் அனுப்பி வைக்கப்பட்ட பெருமகனேகலாநிதி. செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன். அவரது மேதாவி லாசமே பல சந்தர்பங்களில் எம் சமூகத்தையும் இனத் தையும் பாதுகாக்கும் கவசங்களாக அமைந்துள்ளன. அவருக்கு வழங்கப்படும் தனித்துவ மரியாதையும் விருதுகளும் வாழ்த்துக்களும் அவருக்குப் பெருமை சேர்க்கும் அடையாளங்கள் என்பதைத் தாண்டி இச் சமூகம் அவருக்கு வழங்கும் தனது நன்றியுணர்வின் அடையாளங்களாக கொள்ளத்தக்கன. பெருநிறுவ னங்களால், மக்கள் செல்வாக்குமிக்க பெரும் தலை வர்களால் ஆற்றக்கூடிய அல்லது ஆற்ற வேண்டிய காலக் காரியங்களை ஒரு தனிமனிதனா கஆற்றும் அவரது வல்லமை எவருக்கும் வாய்க்காத பெரும் வரம். அவ் வரம் விளைவிக்கும் சமூக அனுகூலங்கள் பெரிது. காலம் கடந்தும் நிலைபேறாய் நிற்கும் காரி யங்களின் கர்த்தாவான கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகனுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாத னையாளர் விருதுதக்கதிலும் தகும்.
கலாநிதிஆறு. திருமுருகன் பற்றி அவரது மணி விழா மலரான திருமுருகன் 60இல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறி சற்குணராஐh பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “கலாநிதிஆறு .திருமுருகனை நினைக்கும் கணமெ லாம் எனக்கு என் வாழ்நாளின் ஓர் பசுமையான ஞாபகம் மனதின் ஆழத்தில் இருந்து எப்போதும் மேல்எழும். எங்கள் தந்தையார் ஏழு பிள்ளைகளைப் பெற்ற ஒரு சாதாரண லிகிதராகப் பணியாற்றிய அரச உத்தியோகத்தர். அப்பாவின் வருமானம் எங்கள் குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் உச்ச பட்ச மாகப் பூர்த்திசெய்யப் போதாது. அப்பாவின் சுமை களில் பாதியை சுமந்து கொள்வதற்கான சில ஏற்பா டுகள் எங்கள் வீட்டில் இருந்தன. அவற்றுள் முதன் மையானது எங்கள் வீட்டில் இருந்த பசுமாடு. அது காலையில் வீட்டிலிருந்து தானாகவே புறப்பட்டால் தன் கண்ணில் அகப்படும் இரையாக்கக்கூடிய புல் பூண்டுகளை எல்லாம் உணவாக உட்கொள்ளும். தனக் கான தண்ணீரைத் தானே தேடியருந்தும். மாலையா னதும் வீடுதிரும்பும். வீடு திரும்பியதும் தெருவோ ரங்களிலும் வயல் வரம்புகளிலும் இருந்து தானுண்ட புல் பூண்டுகள் மூலம் பெற்ற சத்தியை எங்கள் குடும் பத்தின் ஒன்பது பேருக்கும் தனது கன்றுக்குமாக இணைந்து பாலாகச் சொரியும். இந்த அதிசய உணர்வை நினைக்கும் போது பசுவின் உன்னதம் மகோன்னதமா னது எனும் தத்துவம் எனக்குள் எழுவதுண்டு. இந்தப் பசுவையொத்தவர் தான் எங்கள் ஆறு.திருமுருகன் ஐயா. உலகம் முழுவதும் உலாவி எவர் எவரிடமோ இருந்தெல்லாம் செல்வங்களைப் பெற்றுவந்து எங்கள் மண்ணுக்கு பாலாகச் சொரியும் பசு அவர். பசுவை யொத்த சாதுவான குணத்தையும் அவர் தான் சார்ந் தோர் மத்தியில் பிரதிபலிப்பவர். முழுமுதற் கடவுள் சிவன் தன்னருகே பசுவை வைத்திருக்கும் தத்துவத் தின் உட்பொருளை விளக்க எமக்கு வாய்த்த தவப் புதல்வர் ஆறு.திருமுருகன் ஐயா”.
துணைவேந்தர் அவர்களது மேற்குறிப்பிட்ட கூற்று கலாநிதிஆறு. திருமுருகன் அவர்களின் வாழ் வின் மகத்துவத்தை மிகக் கச்சிதமாக எடுத்துக் கூறு கின்றது. புல வழிகளிலும் இன்னல்களைச் சந்திக்கும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு எவ்வெவ் பணிகளை எப்போது ஆற்றவேண்டுமோ அதனை தருணம் உணர்ந்து ஆற்றுகின்ற ஞானமனிதர் ஆறு.திருமுருகன் அவர்கள். சுhதாரண ஒரு பாடசாலை ஆசிரியராக, பத்தோடு பதினொன்றான கோவில் சொற்பொழி வாளராக ஆரம்பித்த அவரது வாழ்வு இன்று அடைந் திருக்கும் பல் பரிமாணவிரிவும் வீச்சும் அவருக்கு காலம் வழங்கிய அங்கீகாரமும் கொடையும் ஆகும்.
யாழ்ப்பாணம் கோப்பாயை பூர்வீகமாகவும் கொண்ட நல்லாசிரியர் ஆறுமுகம் அவர்களுக்கும் இணுவிலைச் சேர்ந்த நல்லாசிரியை சரஸ்வதி அவர் களுக்கும் மூன்றாவது புதல்வனாகவும் நான்காவது மகவாகவும் 1961 மேமாதம் 28ஆம் திகதி வைகாசி விசாகத்தன்று பிறந்தவர் ஆறு.திருமுருகன். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்று, உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு பட் டதாரியானார். மஹரகம தேசியகல்வி நிறுவகத்தில் பட்டப்படிப்பின் கல்வியியல் டிப்ளோமாப் படிப்பை மேற்கொண்டார். 1989ஆம் ஆண்டில் சுன்னாகம் திரு ஞான சம்பந்தர் வித்தியாசாலையில் ஆசிரியராகநிய மனம் பெற்றார்.பின்னர் 1993ஆம் ஆண்டில் சுன்னா கம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று, பகுதித் தலைவராகவும், உப அதிபராகவும், பின்னர் பிரதி அதிபராகவும் பணியாற்றி 2008 மார்ச் மாதம் 16ஆம் திகதிமுதல் அதே கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். இவரது ஆசிரிய சேவையைப் பாராட்டும் வகையில் 1991ஆம் ஆண்டுயாழ். மாவட் டக் கல்வித் திணைக்களமும், 2002ஆம் ஆண்டு வலி காமம் கல்வி வலயமும் நல்லாசிரியர் விருதை வழங் கிக் கௌரவித்தது. சமூகப் பணிகளை முன்னெடுத்து செல்வதை இலகுவாக்கும் நோக்குடன் அவர் தனது 50வது வயதில் அரச பதவிகளை ஓய்வுறுத்தி இன்றள வும் தனது சமய, சமூப் பணிகளை முழுநேரமாக ஆற்றி வருகிறார்.
தனது தந்தைதாய் வழிவாய்த்த பரம்பரை இயல்பு களும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விகற் கும் காலத்தில் அவரது ஆசிரியர்களான அமரர்கள் கலாநிதி.க. சிவராமலிங்கம்பிள்ளை, தேவன் மாஸ்டர் மற்றும் மூதறிஞர் சொக்கன் போன்றவர்களின் வழிப் படுத்தலும் பெருமனிதர்களின் தொடர்பும் அவரை தமிழின் பால்ஈர்த்தன. சைவசமயத்தின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்தன. அத்துடன் இரண்டாம் ஈழப்போர் காலத்தில் இந்திய இராணுவம் இவ் மண்ணில் நிலை கொண்டிருந்த சமயம் அவர் சந்தித்த அச்சுறுத்தல்க ளும் வன் முறைகளினால் மரணத்தின் வாசல் வரை சென்று மீண்டு மறுபிறப்பான அவரது வாழ்வும் இன்று அவர் வாழும் வாழ்வுக்கான பாதையை வகுத்துக் கொடுத்தன எனஅவர் அடிக்கடி சொல்வதுண்டு.
1980களின் நடுப்பகுதியில் கம்பன் கழகத்தின் பேச்சாளராக அரங்குகள் கண்ட அவர் பின்னர் தனித் துவமான ஆன்மீகத் தொடர்சொற்பொழிவாளராக காலத்தால் கைகாட்டப்பட்டார். அவரது சொல்லின் பெருக்கும் சொல்லவரும் கருத்தை சுவைபடச் சொல் லும் ஆற்றலும் செஞ்சொற்செல்வர் எனும் உயர் அடை மொழியை அவருக்காக்கியது. இவ் பட்டம் இணுவில் காரைக்கால் விசாலாட்சி சமேதவிஸ்வநாதப் பெருமான் ஆலயத்தில் நடைபெற்ற தொடர்சொற்பொழிவின் நிறைவில் வழங்கப்பெற்றது. தன் சொல்லின் ஆற்ற லால் விளையும் அறுவடையை தனக்காக்காது அதனை சமூக விளைவுக்கான நீராகபாச்சும் தீர்க்கமான முடி வினை அவர் எடுத்ததன் விளைவே இன்றுஅவரால் விளைந்திருக்கும் ஆயிரம் நன்மைகளின் அடித்தளம்.
1990களின் நடுப்பகுதியில் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களினால் ஞானப்புதல்வனாக தத்தெடுக்கப்பட்டார் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள். அம்மாவின் ஆசியும் வழிகாட்டலும் இவரது ஆன்மீகவாழ்வின் செல்நெறி யைத் செப்பனிட்டன. அம்மாவுக்குப் பின்னர் தெல் லிப்ளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரா கச் செயற்படவும் அம்மாவின் அறப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் அவருக்கு வாழ்நாள் வாய்ப்புக்கிட்டியது. தனது சொற்பொழிவின் நிறை வுகளில் தனக்கு வழங்கப்படும் அன்பளிப்புக்களை தர்மகாரியங்களுக்குச் செலவிடும் திடசங்கற்பம் கொண்ட இவரதுவாழ்வு இறையருளாலும் இயற்கை யின் பெருங்கருணையாலும் ஆசிர்வதிக்கப்பட்டன. செல்லும் திசையாவும் வெல்லும் சொல் இவருடைய தாகியது. இங்கிலாந்தில் ஆரம்பித்த இவரது வெளி நாட்டுச் சொற்பொழிவுகள் இன்றளவும் அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா எனவருடம் தோறும் தொடர்கின் றன. அந் நாடுகளுக்குச் சென்று வந்தபோது கிடைத்த பெருநிதிப் பங்களிப்பினால் இந்தமண்ணில் அரசாங் தினால் கூட செய்யமுடியாத பல நிலைப்பேண் காரி யங்களை கலாநிதி.ஆறு.திருமுருகன் ஆற்றி முடித்தி ருக்கின்றார்.
குறிப்பாக தனது ஆளுகையின் கீழாக சிவபூமி அறக்கட்டளைஎனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் சிவபூமி முதியோர் இல்லங்களை தொல்புரம் மற்றும் கீரிமலையிலும், விசேட தேவையுடைய பிள் ளைகளுக்கான சிவபூமி மனவிருத்திப் பாடசாலைகளை கோண்டாவில், கிளிநொச்சி. திருகோணமலை, மற் றும் முள்ளிவாய்க்காலிலும் அமைத்தார். அத்துடன் நாவற்குழியில் திருவாசக அரண்மனை மற்றும் அரும் பொருட்காட்சியகம், மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம், மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் திருமந்திர அரண்மனை, கண்டிகலகா, திருகோண மலை, கீரிமலை மற்றும் கொழும்பில் சிவபூமி நிலை யங்கள், மடங்கள் எனபல நூற்றாண்டு கடந்தாலும் நிலைத்த அடையாளங்களாகத் திகழவல்ல பெரும் காரியங்களை ஆற்றினார். இவரது இக் கருமங்களுக் குப் பின்னால் இவ் இனம் சந்திக்க விருந்தபெரும் அடை யாள அழிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என்பதை கூர்ந்து அவதானிக்கும் போது உணரக் கூடியதாகவுள் ளது. இந் நிறுவனங்கள் மூலம் அடையப்ப பெற்ற சமூக அடைவுகள் மிக வினைத்திறனானவை. குறிப்பாக கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவர்கள் பரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற மையும் அப் பாடசாலை இலங்கையின் விசேட தேவை யுடைய பிள்ளைகளுக்கான பாடசாலைகளில் முதன்மை நிலை பெற்றமையும், துர்க்காபுர மகளிர் இல்லப் பிள்ளைகள் இலங்கையின் பலபல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறுவதும், ஆதரவற்ற பல பெரியவர்கள் தமது இறுதி நாள்களை சிவபூமி முதியோர் இல்லத் தில் அமைதியாக கழித்து இறைபதம் அடைவதும் இவரது செயல்வீச்சினால் விளைந்தவை.
சிவபூமி அறக்கட்டளைப் பணிகளுக்கு அப்பால் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவராக இன்றளவும் இருந்து யாழ்ப்பாணத்த்pல் இந்து மாமன்ற வளாகம், நல்லை ஆதினமண்டபப் புனரமைப்பு, என் பவற்றை முன்னின்று செயற்படுத்தினார். அத்துடன் இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் சட்ட நிபுணர் கந்தையா நீலகண்டனுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் பெரும் நிதியுதவியைப் பெற்று மன் னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தை கருங்கற் கோவி லாக கட்டியெழுப்பி மன்னாரின் தேன்பொந்தின் மகத் துவத்தை மீண்டும் நிலைபெறச் செய்தார். முறிகண்டி யில் இந்து மாமன்றத்தின் நிலையம் தாபிக்கப்பட கரு வியாகினார். நல்லூரில் துர்க்காதேவி தேவஸ்தானம் மூலம் மணிமண்டபம் ஒன்றைக் கட்டி அதனை கலா சார பல்நோக்கு பயன்மிக்கதாக இன்றளவும் பேணுகின் றார். துர்க்காதேவி தேவஸ்தானம், சிவபூமி அறக்கட் டளை மற்றும் இந்து மாமன்றம் மூலம் இறுதிப் போரி னால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக் கும் கர்ப்பிணித் தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு கொடுத்து அவர்களது வாழ்வுக் குநம்பிக்கை யொளியேற்றினார்.
கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் சமூகப் பணி கள் விளைவித்ததாக்கத்தின் அளவறிந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவகலாநிதிப் பட் டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. அதே பல்கலைக் கழகத்தின் பேரவையில் இவர் நீண்டகாலம் உறுப்பி னராக விருந்ததுடன் பல்கலைக்கழகத்தின் பல அறி வுப் பணிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் ஆதர வும் கொடுத்தா குறிப்பாக தமிழ்த் துறையில் நிறுவப் பட்ட கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதிய நியதிகளை மீளவரைவதில் இவர் எடுத்த அதீத அக்க றைகாரணமாக இன்று பல அறிவுப் பணிகள் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதுடன் அவ் நிதியத்திலிருந்து தமிழியல் நூலகம் ஒன்றும் தாபிக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு கலாநிதிஆறு. திருமுருகனார் ஆற்றிய ஆற்றும் பணிகள் அளவிடற்கரியன. அவரது சாதனை களையும் அடைவுகளையும் இந்த சிறுகட்டுரையில் உள்ளடக்குவது என்பது இயலாதகாரியம். இருப்பி னும் இன்று அவர் டான் தொலைக்காட்சியின் வெள் ளிவிழா நாளில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் தருணத்தில் அவரது பணிகள் சிலவற்றை இக் கட்டுரை கோடிட்டுகாட்டியுள்ளது. உண்மையில் வாழ்நாள் சாதனையாளர் என்பதற்கு அர்த்தம் கொடுக் கும் கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் வாழ்வு இன்னும் இன்னும் நீள்வதாக. இனம் வாழ் அவர் வாழட்டும்.
– இ.சர்வேஸ்வரா
விரிவுரையாளர் கல்வியியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
