இராவண எல்ல அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக பதுளை மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கை மற்றும் கால்களை இழந்துள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களில் 8 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்றும் மருத்துவர் பாலித ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
