
தேர்தல் அரசியலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் தன் மீதான புலிநீக்க அரசியல் சாயலை கழுவிக்கொள்ள தொடர்ந்தும் பாடுபட்டுவருகின்றார்.அவ்வகையில் மாவட்ட ரீதியாக முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளை அவர் சந்தித்து வருகின்றார்.
Politics
இதனிடையே நிதியமைச்சர், பிரதமர் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார தன்னைக் கோரியதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் நீதி அமைச்சர் பதவியை ஏற்கும்படி தன்னைக் கோரியதாகவே தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நாடாளுமன்றில் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றிய போது, நாட்டின் பிரதமராக எம்.ஏ.சுமந்திரன் வரவேண்டும் என்றும் உரையாற்றியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட நலனுக்காக சுயலாபத்திற்காக தாம் செயற்படுவதாக இருந்தால் பதவிகளை பெற்றிருப்போம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அனுர அரசு தனது தீர்வுத்திட்டத்தை எம்.ஏ.சுமந்திரன் ஊடாகவே முன்னெடுக்க முற்பட்டு;ள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
