
சுவிட்சர்லாந்தின் Lausanne நகராட்சித் தேர்தல் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி அரசியல் அரங்கில் களம் இறங்கியுள்ளார்.
அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் உயர் கல்வி கற்று வரும் அவர், பொதுக் கொள்கை மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவராக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
அதோடு, தமிழ் மொழிக் கல்வியிலும் தகுதி பெற்றுள்ள அவர், சமூக மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அக்சனா குமாரசாமி, Swiss Social Democratic Party (PS) கட்சியின் பட்டியல் 5 (Liste 5) கீழ் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
