நிகழ்நிலைச் சட்டம் எதனைக்கூறுமோ
புத்துயிர் பெற்று பழையதைவிட கொடுமை ஆகுமோ
செத்து மடிவது இனித் தொடருமோ?
செத்துப் பெற்றுப் பிழைப்பது கொடுமையாகுமோ?
தமிழர் நம்பிக்கையோடு நல்ல வழிகாட்டுமோ? –
அல்லது தமிழினத்தை அடக்கிடக் கொடுமையாகுமோ?
வருபவன் எல்லாம் எம்மை அழித்து
அரசுகள் நடத்தி ஆண்டுகள் போச்சு
ஆசையைக் காட்டி மோசம் செய்து
ஆட்சியில் இருந்து என்ன ஆச்சு?
பயங்கரவாத முத்திரை குத்தி
எம்மேல் குதிரை ஓடுகிறார்
பதவி மோகத்தால் எம்மை அழித்து
பரிசுத்த ஆட்சியாகக் காட்டுகிறார்!
சிறுபான்மை என்று எம்மைச் சொல்லி
சீற்றம் கொள்ள வைக்கின்றார்
சிதறியே எம்மை உலகில் வாழ
இவர்களே காரணம் ஆகின்றார்!
கொடியது ஆனால் நிகழ்நிலைச் சட்டம்
உலகுக்கு நீயும் பறைசாற்று அது
வருவதற்கு முன்னே அதனை நிறுத்து!
ஒன்றாய் இணைந்து கைகோரு!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (21.01,2026)
