சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் தங்களது சின்னத்தை மக்களிடம் ஒன்று சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக மாறி வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்து வருகின்றனர். மறுபுறம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடருமா அல்லது இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி இருந்து வருகிறது. இவர்களை தாண்டி அனைவரது பார்வையும் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதுதான் உள்ளது. சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் தங்களது சின்னத்தை மக்களிடம் ஒன்று சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது.
