கடந்த 16 ஆண்டுகளாக மனித உரிமை பேரவையின் பக்க அறைகளில் நடைபெறும் “பக்க நிகழ்வுகள்” தமிழர்களால் எந்தப் பயனும் இல்லை. என்பதை உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அறிந்தும் தெரிந்தும் தெளிந்தவர்களாய் அவற்றின் பயன்கள் என்ன என்பதை பார்க்கவேண்டும். இந்நிகழ்வுகள் ஊரை, உலகத்தை, இறுதியில் சொந்த மக்களையே ஏமாற்றும் நிகழ்வுகளாக மாறியுள்ளன.
புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் “பெரிய பிம்பங்கள்” என தங்களை காட்டிக்கொள்ளுவதற்கே இந்நிகழ்வுகள் பயன்படுகின்றன. மனித உரிமை பேரவையின் கட்டிடத்துக்குள் நுழைய என்.ஜி.ஓக்களின் ஆதரவை நாடி, அங்கு உள்ள உணவகங்களில் உணவுண்டு, வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் புகைப்படம் எடுத்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி விட்டு வெளியேறுவதே இன்று தமிழர்களின் நிலையாகியுள்ளது.
இதனை மீறி யாரேனும் உண்மையான போராட்டத்தை வெளிப்படுத்த முயன்றால், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உடனடியாக வெளியேற்றிவிடுகிறார்கள்.
எழுதியவர்: ஈழத்து நிலவன்
