
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பது தொடர்பிலும் தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் தீர்வை கோருவது தொடர்பிலும் , இவற்றை மக்கள் மயப்படுத்துவது தொடர்பிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பினாமி அமைப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அரசியல் கட்சி தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் என பிரதிநிதிகள் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்ததாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே உள்ளுர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னராக செயற்பட்டுவரும் தரப்புக்களே இம்முயற்சியை மேற்கொண்டுள்ளன.
