
யாழ்ப்பாண நகர அப்பிள் கடை வியாபாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். மாநகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தால் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் யாழ் நகரில் உள்ள அப்பிள் கடைகள் மீது கொண்டுவரும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட அப்பிள் கடை வியாபாரிகள், மாநகர சபை உறுப்பினர்களுக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
