முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பம் துறையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு இத்திமடு தட்டாமலை மக்களால் நேற்று(07.04.2026) கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த யுத்தத்தில் தாயினை இழந்த குறித்த மாணவன் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் தில்லைநடராசா சிறீகுமார் ( சித்தப்பா) அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும் தரம்1 தொடக்கம் 11 வரை தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லுரியில் உயர்தரகல்வியினை பயின்று அண்மையில் வெளிவந்த 2025ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பம் துறையில் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனை பாராட்டி வாழ்த்தும் முகமாக குறித்த மாணவனின் சொந்த இடமான ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய இத்திமடு தட்டாமலை மக்களால் இன்றையதினம் மாணவன் சிறீதரன் விதுசனுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் போது குறித்த மாணவனின் அப்பம்மாவிற்கான கௌரமும் வழங்கி வைக்கப்பட்டிருநதுடன், குறித்த கிராமத்தில் 2015ஆம் ஆண்டு கலைத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற விஜயகுமார் விதுஷாவின் பெற்றோருக்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தது.
பெரிய இத்திமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் சௌந்தராஜன் ராஜேஸ்வரி தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் தண்டுவான் பாடசாலையின் அதிபர் பஞ்சலிங்கம், தற்போதைய அ.த.க பாடசாலையின் பிரதி அதிபர், ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சுந்தரம், தண்டுவான் அ.த.க பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர், பெரிய இத்திமடு கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.ஜனார்த்தனன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலத்தினுடைய மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர் க.ஜனமேஜந்த், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினைடைய அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ந.மயூரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக்த்தினுடைய முதியோர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.ஜதீஸ் மற்றும் பெரியவர்கள், கிராம மக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
