இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த மூவரும் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன் , கெஸ்பேவ பொலிஸ் பிரிவிலுள்ள சிறி சதஹம் பிக்கு மடத்தின் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியாக பரிந்துரைக்கப்பட்ட பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அபிசன் பிரான்சில் மரணம்
- தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி
- இலங்கையை உலுக்கிய அனர்த்தம் ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!
- மாமனிதர் தராகிக்கு விருது!
இதேவேளை, கொபேகனே பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையமொன்றில் ஊழியராக கடமையாற்றிய 57 வயதுடைய நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
