மரபுத் தமிழை நகைச்சுவை கலந்து தரும் நற்றமிழ்ப் பேராசான் பேராசிரியர் சி. சிவலிங்கராஜா அவர்களின் வாழ்வியல் தரிசனம்
ஈழத்துத் தமிழ் பேராசிரிய மரபில் இரு மரபும் துய்ய வந்த பேராசிரியராக விளங்கி பேராசி ரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா அவர்கள் சிறப் புப் பெறுகிறார். பல சைவத் தமிழ் அறிஞர்களை பன் முக ஆற்றலாளர்களை தமிழிற்கு தந்த வடமராட்சி யின் கரவெட்டி மண் இவரது பிறப்பிடம். அங்குள்ள கட்டைவேலி மெ. மி. த.க பாடசாலையில் தனது ஆம்பக்கல்வியையும், விக்னேஸ்வராக் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியையும் கற்றவர். கரவெட் டியில் வாழ்நத பணிடிதர் வீரகத்தியிடம் தழிழ் இலக்கண இலக்கியங்களை பண்டித முறை சார்ந்த பாடங்கேட்டல் முறையூடாக கற்றவர். அங்கு தான் இவரது மரபிலக்கிய இலக்கணக் கல்விக்கான அடித் தளம் இடப்படுகிறது. அத்தோடு தனது பேச் சாற்ற லால் அக்கால அரசியல் மேடைகளையும் அலங்கரித் தவர் குறிப்பாக சிவசிதம்பரத்தினுடைய தேர்தல் மேடைகளில் இவரது கம்பீரக் குரலும் ஒலித்தது. இதனால் இவர் அக்காலத்தில் ஈழத்துக் கருணாநிதி என அழைக்கப்பட்டவர். இது அவருடைய ஒரு மரபு என்றால் மறுவளமாக இத்தகைய பின்னணிகளோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் கற் பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டார். அங்கு இவர் தமிழ்ப் பேராசிரியர்களை வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, சண்முகதாஸ் என மிகப்பெரும் தமிழ்ப் பேராளுமைகளிடம் தமிழைக் கற்றும் பேறு பெற் றார். இதனால் தமிழின் நவீன விடயங்களிலும் புலமை பெற்றார். இதுதான் அவரது மறுமரபு இவ்வாறு இரு மரபும் துய்ய வந்த தமிழ்ப் பேராசிரிய ஆளுமையாக நாம் இவரைக் கண்டு மகிழ்கிறோம்.
1945இல் இவ்வுலகில் தோன்றிய இவர் இன்று எண்பது அகவை கடந்து எம் மண்ணின் தழிழ் முது சொத்தாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல்கலைக்க ழகத்தில் கற்கும் காலத்தில் தன்னோடு ஒன்றாகக் கற்ற நெடுந்நீவைச் சேர்ந்தவர் சரஸ்வதி என்பவரைக் காத லித்து கரம் பிடித்தவர். தனது இல்லறப் பயனாக சிவதி, ரகுராமன் ஆகிய பிள்ளைச் செல்வங்களைப் பெற்று அவர்களை கல்வியில் உயர வைத்து இன்று அவர்கள் வைத்தியத்துறையில் மருத்துவ பீடத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் வைத்திய கலாநிதி களாகவும் உள்ளனர். இவர்கள் வழி பேரப்பிள்ளைக ளையும் கண்டு மகிழ்ந்திருப்பவர் இவரது அன்பு மனையாள் சரஸ்வதி அம்மையார் அவர்கள் உடுவில் மகளிர் கல்லூரியில் தமிழ், நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியையாக விளங்கி ஓய்வு பெற்றவர்.
பேராசிரியர் அவர்களது நகைச்சுவை உணர் வென்பது அவரோடு கூடப்பிறந்த ஒன்று என்று கூறலாம். அது கரவெட்டி மண்ணுக்குரிய மண்வா சம் என்றும் கூறலாம். இவ்வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவரிடம் தமிழை சிறப்புக் கலையாகவும் பின்னர் முதுமாணிக் கற்றையாகவும் பயின்றவன் என்ற வகையிலும் அவர் பிறந்த வடம ராட்சி மண்ணைச் சேர்ந்தவன். அவர் பிறந்த கர வெட்டி மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டவன் என்ற வகையிலும் இதனை அனுபவிக்கும் பேறு பெற்றவர்களில் நானும் ஒருவன் குறிப்பாக அவருது திருமணம் பற்றி அவர் நகைச் சுவையாக குறிப்பிடும் போது எனக்கு நாக்கிலும் சரஸ்வதி இருக்கிறாள் நெஞ்சிலும் சரஸ்வதி இருக்கிறாள் என்றும் நான் வல் லைப் பாலத்துக்கு அங்காலை பிறந்து பண்ணைப் பாலத்துக்கு அங்காலை பெண் எடுத்தவன் என்று கூறிக்கொள்வார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப் பாகக் கற்ற இவர் பின்னர் அங்கேயே தமிழ்த்துறை விரிவுரையாளராகி பின்னர் தமிழ்த்துறை தலைவரா கக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். மரபிலக்கியம், நாட்டரியல், 19ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியம் போன்ற துறைகளில் அதிக தாடனம் செய்து கொண் டவர். தான் என்றைக்கோ படித்த மரபிலக்கிய பாடல் களை எல்லாம் மனனமாக ஒப்புவிக்கும் திறன் படைத் தவர். இரட்டுற மொழியும் நகைச்சுவைகளால் எம்மை யெல்லாம் சிரிக்க வைப்பவர். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர், மரபு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடந்த பல தமிழியல் ஆய்வு மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை சமர்ப் பித்த சிறப்புக்குரியவர்.
எப்போதும் தான் பிறந்த கரவெட்டி மண்ணின் கிராமிய வாழ்வியலை மறக்காது எங்கு சென்றாலும் அந்த மண்ணின் சிறப்புகளை எடுத்துச் சொல்பவர். தற்போது, திருநெல்வேலியில் வசித்தாலும் இன்றும் கரவெட்டியில் இடம்பெறும் தனது உறவுகளின், நண்பர்களின் இன்ப, துன்பங்களில் கலந்து சிறப்பிக் கும் பண்புடையவர். இன்றைய தலைமுறை மறந்து போன பல விடயங்களை அவரது வாயினால் கேட் பதே தனிச்சுவை. தனக்கென தலைமுறைகள் கடந்த மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்கியவர்.
டான் தொலைக்காட்சியை பொறுத்தவரை அதன் நிகழ்ச்சிகளான “கவிதைகள் சொல்லவா”, சங்கப் பல கையின் “நிலையும் நினைப்பும்”, “நல்ல தமிழ் செய் வோம்” போன்ற நிகழ்ச்சிகளில் இந்த வயதிலும் கலந்து தன்னுடைய அனுபவங்களை – இலக்கியப் புலமையை வெளிப்படுத்திய சிறப்புக்குரியவர்.
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கும் ஈழத்து தமிழிய லுக்கும் இவர் ஆக்கி அளித்த – தொகுத்தளித்த அருங் கொடைகளாக “வடமராட்சியின் கல்விப் பாரம்பரி யமும் இலக்கிய வளமும்”, “ஈழத்துத் தமிழ் இலக்கி யச் செல்நெறி”, ஈழத்துத் தமிழ் உரை மரபு, யாழ்ப் பாணத்து வாழ்வியல் கோலங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் தமிழ் கல்வி (சரஸ் வதி அவர்களுடன் இணைந்து எழுதியது), யாழ்ப்பா ணப் பண்பாடு மறைந்தவையும் மறந்தவையும், ஈழத் துத் தமிழ் உரை மரபு, சொல்லினால் ஒரு மாளிகை (கவிதைத் தொகுதி) பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி வித்துவ சிரோன்மணி கணேசையரின் வாழ்வும் பணியும், அகநானூறு (கனிற்று யானை நிரை – பதிப்பு), யாழ்ப்பாணத்துக் கல்வி வளர்ச்சியில் இந்திய ஆசிரியர்களின் பங்களிப்பு, (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது – சோ. ப. அவர் களால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியி டப்பட்டது) ஆறுமுகநாவலரது பணிகள் பற்றிய தொகுப்புநூல், சிறுவர்களுக்கான மேடைப் பேச்சு பயிற்சி நூல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2005ஆம் ஆண்டுக்குரிய சம்பந்தர் விருதையும் இவர் வென்றுள்ளார். மேலும் பல விருதுகளையும் வென் றுள்ளார். இன்னும் பல சிறப்பான படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். எம் தமிழ் ஆசான் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ இறைவ னைப் பிரார்த்திப்ப துடன் அவரைப் பற்றிய இவ் ஆக் கத்தை எழுத சந்தர்ப்பம் வழங்கிய டான் தொலைக் காட்சி குழுமத்தினருக்கும் விழாக் குழுவுக்கும் நன்றி கூறி இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
– வேல்நந்தகுமார், விரிவுரையாளர்,
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை.
