
யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் உடைமையில் இருந்து ஒரு கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
