
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் அனுர அரசினால் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ
திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்றை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த புகார்களையடுத்து, அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
அதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு கிரிக்கெட் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
