
முத்தமிழ் குமரன் போற்றி
முருகா உன் பாதம் போற்றி
சக்திவடிவேல் தாங்கிய!
வேலவா உன் திருவடி வந்தேன்
கவிபாடி உன்னை போற்றி
முக்கனிக்காக உலகை வலம் வந்தவனே!
முத்தமிழ் குமரன் என்று பேர் பெற்றவனே
எப்போதும் எம் வாழ்க்கை தப்பாகப் போகாமல்
எம்மையெல்லாம் காப்பவனே!
எம் நெஞ்சமதில் குடிகொண்டு என்றும் காப்பவனே!
முத்தமிழ் குமரா முருகனே வேலா!
எத்துயர் வரினும் உன் அடி சரணம்!
எம் சந்ததி வாழ என்றும் அருள் புரிபவனே!
ஏந்திடும் கரங்களின் வழி அறிபவனே!
வள்ளி தெய்வயானையுடன் வலம் வருபவனே!
வண்ணமயில் ஏறும் நாயகனே!
நித்தம் உன் வாசல் வந்தோரின் குறை தீர்க்கும் வேலவனே!
நீ இன்றி வாழ்வில் ஏது துணை முருகா!
உன் அடிதொழுவது அன்று வேறு ஏது என் பணி முருகா!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா(06.02.2026)
