January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

முன்னே ஒரு தனி மரம் !

வண்ணமாய் வானத்து முகில்
வழி வழியே நிறம்மாற
நடந்து செல்லும் என் கால்கள்
விசை குறைய தடுமாற

சின்னதாய் களைப்பாலே
நான் சிறு நேரம் நின்ற போது
முன்னே ஒரு தனி மரம்
அது என்போலே தனியே நின்றது !

தெருவோடு திசை ஓட
திசையோடு முகில் ஓட
வெள்ளையும் கறுப்புமாய்
வானத்தில் முகில் கூட்டம் முன்னோட
எல்லை எங்கே என்வாழ்வில்
எனக்கேதும் தெரியாதே

சிறுப்பிட்டி எஸ். தேவராசா (கவிஞர் ,இசையமைப்பாளர் ,ஊடவியலாளர்)

Loading

About The Author