பிரான்ஸில் நடந்த விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 7ம் திகதி செய்ன்-எட்-மார்னே (Seine-et-Marne) மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.பத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவதினத்தன்று காலை இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திவிட்டு 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்
