யேர்மனி டோட்முண்டில் வள்ளுவர்சிலைஅமைத்த ஓராண்டு நிறைவுவிழா வள்ளுவர்சிலை அருகில் ஒன்று கூடி அதன்பின் தமிழர் அரங்கு மண்டபத்தில்
ஆய்வுரைகளும் கருத்துரைகளும்
-திருக்குறளும் எதிர்காலச் சந்ததியும் இளம் பல்துறை ஆளுமையாளர் திரு சிவவினோபன் அவர்களின் சிறப்புமிக்க விஞ்ஞானபூர்வமான பார்வையும் அதன் மூலம் விஞ்ஞனானத்துக்கும் திருக்குறள் தந்தகருத்துகளும்மான காணொளியுடன் ஆன விளக்கத்துடன் முன்வைத்தார்,
-திருக்குறள் பேசும் அரசியல் எழுத்தாளர் கவிஞர் ,நாடுகடந்த தமிழீழ டோட்முண்ட் செயல்பாட்டாளர் ,திரு.சுப்பிரமணியம் மிக அறிவுபூர்வமான விளக்கங்களை தனக்கு கொடுக்கப்பட்ட கருத்துகளுக்கான விளக்கங்களை முன்வைத்தார்,
-திருக்குறள் காட்டும் பெண் திருமதி தமிழ்ழாலய நிர்வாகியும் ஆசிரியருமான சந்திரா கோகிலன்
திருக்குறள் காட்டும் பெண்ணியத்துக்கும் சிறப்பு விளக்கத்துடன் மிக ஆளுமையாக எடுத்துரைத்தார்;
-திருக்குறளின் கவிச்சுவை திருமதி நகுலாசிவநாதன் எழுத்தாளர், ஆசிரியர், பேச்சாளர் ,திருக்குறளின் கவிச்சுவைபற்றி நா சுவைக்க நலம்பட முன்வைத்து தனது பணிபுரிந்தார்,
-திருக்குறளின் இன்பத்துப்பால் யேர்மனி டோட்முண்ட் வள்ளுவர்பாடசாலை இயக்குனரும், பேச்சாளரும் யேர்மனி தமிழ் கல்விச்சோவை, யேர்மனி தழிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவையின் தலைவர் திரு பொன்சிறிஜிவகன் தன் பேச்சாற்றலால் மிகசிப்பாக திருக்குறளின் இன்பத்துப்பால் பற்றி சிறப்பான விளக்கங்களை முன்வைத்து தன்கருத்தை முன்வைத்தார்
-திருக்குறள் வலியுறுத்தும் பகுத்தறிவு எழுத்தாளர் ஆய்வாளர், பட்டிமன்ற பேச்சாளர் ,எழுத்தாளர், திரு சபோசன் அவர்கள் திருக்குறள் வலியுறுத்தும் பகுத்தறிவு பற்றி தன் சிறப்பு சொல்லாடலால் ஆளுமையுள்ள கருத்துகளை முன்வைத்தார்
-சவால்களும் மக்களின் கடமையும் ஈ ரி ஆர் வானொலி இயக்குனரும், ஊடகரும், பேச்சாளரும் ,அகரம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு. இரவீந்திரன் சவால்களும் மக்களின் கடமையும் என்ற கருத்துக்குள்பட மிக சாதுரியமாக பல தகவல்களை முன்வைத்தார் ,இணைவுபற்றிய கருத்தை முன்வைத்தார், திருவள்ளுவர்சிலையின் பராமரிப்பு என்பனவுடன் இன்னும்பல தகவலுடன் ஓராண்டின் சிறப்பு நிறைவானது
06.12.2025 மாலை 15:30 மணியில் இருந்து 19:30 வரை
சிறப்புற்ற நிறைவுகண்டது
இன்நிகழ்வுக்கான அனுவரணை தமிழர்யு அரங்கம்,
யேர்மனி கல்விச்சேவை ஐரோப்பா,
வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை டோட்மண்ட்:
