வருக புத்தாண்டே
வரவேற்போம் உன் வரவை
தருக தரணியெல்லாம்
தன் நிறைவு காண உலகம்
நிறைந்த வாழ்வு வேண்டும்
நிம்மதியாய் வாழ்வும் வேண்டும்
நலிந்த இனமெல்லாம்
நல்வாழ்வு வாழ வேண்டும்
மகிழ்ந்த உன் முகம் போல்
மகிழ்வான உலகம் வேண்டும்
கார்ரிருள் அகற்ற வேண்டும்
பேரொளி தரவும் வேண்டும்
ஊர்கூடி உலகம்கூடி
உனை பாடி அழைப்பது போல்
உன் பார்வை உலகில் வேண்டும்
ஒளி தரவும் வேண்டும்
வானத்தோடு வேடிக்கைகள்
வரவேற்று ஒளியேற்றி
காணிக்கையாய் உனக்களித்து
களிவுற்ற மனங்களோடு
வரவேற்றோம் உன்னை-நாம்
வருக வருக புத்தாண்டே.
(இசைக்கவிஞர் ,இசையமைப்பாளர் ,ஊடவியலாளர்)சிறுப்பிட்டி எஸ். தேவராசா)
