அமெரிக்காவும் ஈரானும் நேற்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வரலாற்று சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.
இந்தப் பேச்சு வார்த்தை எதுவித உடன்பாடுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவின் நிபந்தனைகள் நியாயமற்றவை மற்றும் அளவுக்கு அதிகமானவை என்று ஈரான் கூறுவதாகவும், அவற்றை ஏற்க வேண்டாம் என ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் முடிவு செய்ததாகவும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறுகிறார்.