கட்சிகளும் ஆட்சிகளும்என்னதான் செய்தது ?
புரிதல் இல்லையா?
தமிழினம் தலை நிமிர
தடுத்த மூடரே
தலைமையின் மோகத்தால்
தடுமாறி நிற்போரே
கட்சிகளும் ஆட்சிகளும்
என்னதான் செய்தது
கதிரைக்கும் பதவிக்கும்
விலைபேசி போனது-ஏன்
தன் இனத்தின் நிலைமறந்து-தான்
தமிழன் என்பதை மறந்து
சிங்கள ஆட்சியிடம்
சிக்கித்தான் போனது-ஏன்
வாக்கு தேவை என்றால்
வசைபாடல் செய்பவர்
வந்திங்கே மக்களிடம்
வலிந்து வாக்கு கேட்பவர்
வணிகம் போலவே
அரசியல் செய்பவர்
வந்திங்கே என்னதான் செய்தார்கள்
என்றுதான் கூறுங்கள்?
நாற்றக நட்டு வைத்து
நம்மினத்தின் விடிவுக்காக
மூத்தோர் செய்து வைத்த
முழுவதையும் மறந்தவர்கள்-
ஈழம் காக்க வந்த தலைவனையும்-அவன்
கட்டி வைத்த கட்டமைப்புகளையும்
சீற்றாளும் சிந்தனையால்
சிதறடித்ததை மறந்தீர்களா ?
மண்ணுக்காய் மடிந்தோரை
மறந்துதான் போனீரோ
மதமை அரசியலில்
முழுங்கித்தான் போனீரோ –
கொடுத்த உறுதிகளை
மறந்துதான் போனீரோ
கொள்கை இல்லாத
அரசியல் செய்தவர்கள் -அரசு
முல்லையில் வைத்த கொள்ளியை மறந்து
அரசியல் வாழ்கை மோகத்தாலே
அழித்தவிட்டீர் தமிழர் தாகத்தை
பணத்துக்கும் பதவிக்குமாய்
பல ஆண்டு எம்மினத்தினை ஏமாற்றியோரே
விடைபெறுங்கள் நீங்கள் -அல்லது
விடைதருவார் தமிழர் …….
ஈழத்தமிழன்