
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் சிங்கள போலீசாரால் கைது செய்யப்பட்டு, நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் சிங்கள போலீசாரால் கைது செய்யப்பட்டு சிங்கள போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
பிந்தி கிடைத்த தகவலின் படி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை, நெல்லியடிப் பொலிசார் சுற்றிவளைத்துக் கைது செய்து கொண்டு சென்ற நிலையில், தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் பரப்புரைப் பணிகளில் நின்ற வேளை,நெல்லியடி நகர்ப்பகுதியில் நின்ற சிறிலங்காப் பொலிசார் தேவையற்ற முறையில் வாதாட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்த பகுதியை சுற்றிவளைத்துப் பின் கைது செய்தனர்.
தமிழ்த்தேசியப் பாதையில் கொள்கை பிறளாது எதற்கும் அஞ்சாது உறுதியோடு பயணிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசானங்களைப் பெறக்கூடாது என்ற நோக்கோடு அச்சுறுத்தல் மற்றும் கைதுகளை முன்னெடுத்துள்ளனர்
- கலைஞர் சுஹவாணி பாஸ்கர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.05.2025
- பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சி! 2 வாரம் தூக்கம் தொலைத்த மைத்திரி
- அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.
- வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )
- ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு