தாய் தமிழ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்!

0

நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத் தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் நேற்று (02) மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனால் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை மேற்கு கிளையின் தலைவர் கோபாலபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இந்த அலுவலக திறப்பு விழாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மண்முனை மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் பரப்புரைக்கூட்டமும் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த வேட்பாளர் சிறிநேசன்,

சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து மாற்று இன கட்சிகளுக்கு ஆசனத்தை பெற்றுக் கொள்வதற்காக போட்டி இடுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கட்சி தான் ஆனால் அந்த கட்சி வாக்குகளை சிதறடிக்க முடியுமே தவிர ஒரு ஆசனத்தை மட்டக்களப்பில் கைப்பற்ற முடியாது.

அடுத்ததாக திசை காட்டி புதிய கடை ஒன்று திறந்து விட்டால் எல்லோரும் ஓடி சென்று அந்த கடைக்குள் பொருட்களை கொள்ளளவு செய்வார்கள். அதே போன்று தான் இப்போது நாங்கள் சிலர் எங்களில் சிலர் முட்டி அடிக்கின்றார்கள். அங்கு செல்கின்றார்கள் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகின்றேன்.

ஊழல் இல்லாத மோசடி இல்லாத ஒரு நேர்மையான ஆட்சியை கொண்டுவரப் போகிறோம் என்கிறார்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தமிழர்களுக்கு இருக்கின்ற விசேடமான ஒரு பிரச்சனை என்னவென்றால் இனப்பெரு பிரச்சனைக்கான தீர்வு பெற வேண்டும்.

காணாமல் ஆகப்பட்ட உறவுகளுக்கு ஒருவர் நீதி பரிகாரம் வழங்க வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் 3,000 நாட்களுக்கு மேலாக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இந்த தேசிய மக்கள் சக்தி என்ன செய்யப் போகின்றது தேசிய இன பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு இருக்கின்றது என்பது பற்றி ஆராய வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் ஒரு செயலாளராக இருக்கின்றார் அவர் ஒரு பொதுச் செயலாளர் அவர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கின்றார். அதாவது 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் பற்றியோ அதிகாரப் பகிர்வு பற்றியோ அக்கறை கொள்ளவில்லை என்பதனை குறிப்பிட்டிருக்கின்றார்.

நாங்கள் சொல்வது என்னவென்றால் இந்த கட்சிக்கு அளிக்கின்ற வாக்கு என்பது தமிழர்கள் ஏமாற்றப்படுகின்ற ஒருவன் நிலைக்குத் தான் தள்ளப்படும் அடுத்ததாக டெலிபோன் சின்னத்திற்கு அளிக்கப்படும். தமிழர்களின் வாக்குகளின் மூலமாக ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது.

அதற்கான வாய்ப்பு இல்லை எனவே நாம் சொல்லக்கூடியது அந்த கட்சிக்கு வாக்களித்தால் எமது தமிழர்களின் பிரதிநிதித்துவம் ஒன்றை விளக்க வேண்டி ஏற்படும்.

படகு கட்சியாக இருக்கட்டும் காரில் போட்டியிடுகின்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்று சொல்லப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் கடந்த காலத்தில் எமது போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் என்பதனை நீங்கள் மறந்து விடக்கூடாது.

கிழக்கை பாதுகாக்கின்றோம் என்று இவர்கள் கூறுகின்றார்கள் மயிலத்தமடு, மாதவனை போன்ற இடத்தில் குடியேறிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களால் வெளியேற்ற முடியவில்லை. அரசோடு இணைக்க அரசியல் செய்தால் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று சொன்னார்கள்.

இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இங்கு அரசியல் செய்து எதை சாதித்திருக்கின்றார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்துக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவோம் என்று கூறினார்கள் என்ன நடந்திருக்கின்றது ஒன்றுமே இல்லை.

ஆகவே இந்த படகு காரில் போட்டிருக்கின்றார்கள் கூறுவது எல்லாம் வடிகட்டிய பொய் இந்த காரில் போட்டியிடும் நபர் கப்பலில் போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க வைத்திருக்கின்றார். இப்போது இங்கு வந்து இங்கு இருக்கின்ற ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க வைக்க போகின்றார்.

இந்த சங்கு சின்னத்தில் போட்டியிட போகின்றவர்கள் இவர்கள் கடந்த காலத்தில் குத்துவிளக்கு சின்னத்தை பெற்றார்கள். தற்பொழுது சங்கு சின்னத்தை பெற்று கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற்றது போன்று இவ்வாறு பெற்று விடலாம் என நினைக்கின்றார்கள் ஆனால் அவ்வாறு இடம் கூறப்போவதில்லை.

கடந்த காலத்தில் போட்டியிட்டவர்கள் எமது கட்சியிலிருந்து தாவிச்சென்றவர்கள் இப்போது அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் போன்று எம்மை ஏமாற்றியவர்கள் இப்பொழுது ஏமாந்து வெளியில் இருக்கின்றார்கள். எனவே தயவு செய்து உங்களிடம் கூறக் கூடியது தமிழரசு கட்சி என்பது தமிழ் தேசியத்திற்காக போராடுகின்ற காட்சி தமிழர்களின் ஒற்றுமைக்காக பாடுபடுகின்ற கட்சி.

தற்போது எமது கட்சிக்குள் சில குளறுபடிகள் இருந்தாலும் தேர்தலின் பின்னர் இந்த குளறுபடிகள் தீர்க்கப்பட வேண்டும் சரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதனை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தயவு செய்து தமிழ் தேசிய தரப்பில் இன்று ஒரு உறுதியான பாதையில் செல்லக்கூடிய கட்சி தமிழரசு கட்சி என்பதனை மறந்து விடக்கூடாது. எனவே தமிழர் கட்சி தவறான கருத்துக்களை அளப்பவர்கள் தயவு செய்து இந்த தேர்தல் மூலமாக ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக அவர்கள் இந்த தமிழரசு கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது இரண்டு என்று சொல்லப்பட்டது ஆரம்பத்தில் இப்போது மூன்று என்று பேசப்படுகின்றது எனவே தமிழரசு கட்சியின் மீது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத்தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு தடவை தவறவிட்டால் இன்று தேர்தல் நெருங்குகின்ற போது அலுவலகங்கள் அநேகமான இடங்களில் திறக்கப்பட்டிருக்கின்றது இந்த அலுவலகங்கள் சில வேளைகளில் சாராயம் வழங்குகின்ற நிலையங்களாக கூட மாறக்கூடும் பல இடங்களில் ஏன் திறக்கின்றார்கள்.

என்று பார்த்தால் அந்த இடத்தில் சாராயங்களை அரிசிப்பொதிகளை பதுக்கி வைத்திருந்து கொடுத்து ஒரு மோசடித்தனமான முறையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் முயல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

5,000 ரூபாய் போலி நாணயம் அச்சடிக்கப்பட்டிருக்கின்றது இந்த போலி நாணயங்களை யார் அடித்தார் என்பது தெரியும் இதனை செய்தவர்கள் சில வேளைகளில் வருகின்ற தேர்தலின் போது 5,000 போலி நோட்டுகளை வழங்கி வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்க கூடும் எனவே ஒரு தடவை தவறவிட்டால் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

தங்களுக்காக நாடு பிடிக்கச் சென்றவர்கள் இப்போது காணி பிடிக்க சென்று கொண்டிருக்கின்றார்கள் ஆகவே நாடு பிடிக்க சென்ற போராட்டம் சொந்த தேவைக்காக காணி பிடிக்கின்ற போராட்டமாக மாறி இருக்கின்றது.

சிறிநேசன் மற்றும் ஸ்ரீதரன் அவர்கள் வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற எதிர் பேச்சு கூறுகின்றார்கள் இதிலிருந்து ஒன்று விளங்குகின்றது இவர்கள் இருவரும் வெல்வார்கள் என்று இவர்கள் வென்று விடுவார்கள் என்பதற்காக இவ்வாறு பேச்சுக்களை கூறுகின்றார்கள் இவ்வாறான விஷமத்தனமான பிரச்சாரங்களை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.

Schreiben Sie einen Kommentar

Ihre E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert