
இரு பாடசாலை மாணவர்களை தாக்கி சித்திரவதை செய்ததாக கூறப்படும் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் போராட்டம்
மாத்தளை பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் ஒருவரது சகோதரனுக்கும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பெண் கரும்புலியை நேரில் கண்ட அதிர்ச்சி! 2 வாரம் தூக்கம் தொலைத்த மைத்திரி
- அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.
- வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )
- ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- சிங்கப்பூர்த் தேர்தல்: ஆளும் கட்சிக்கு அமோக வெற்றி!