தேசியப்பட்டியல்:தமிழரசு உயர்மட்டக்குழு முடிவு!
தேசியப் பட்டியல் மூலம் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்திருக்கின்ற ஆசனம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டக் குழு நாளை அல்லது நாளை மறுதினம்கூடி, உயர்மட்டக் குழுவாக ஆராய்ந்து முடிவெடுக்குமென சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இத்தனை காலமாக அப்படி உயர்மட்டக் குழு ஒன்றுகூடி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. இம்முறை கட்டாயமாக உயர்மட்டக் குழுவில் கூடித்தான் அம் முடிவினை எடுப்போம் எனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற எம்.ஏ.சுமந்திரன் பின்கதவு நகர்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில் சி.சிறீதரனின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.