
இலங்கை ஊடாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற இந்திய யுவதி உட்பட மூவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸின் AI-231 விமானத்தில் மும்பையிலிருந்து நேற்று பிற்பகல் 03:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
குறித்த பெண் இலங்கைக்குள் நுழைவதற்கான வீசாவை பெற்று, தனது இந்திய கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை அனுமதிக்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
சோதனையின் போது பெண்ணின் கடவுச்சீட்டு, சர்வதேச பொலிஸாரின் தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது போலியான முறையில் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.