
வானத்தில் சூரியன் எப்போதும் ஒன்றுதான். வாழ்வா சாவா எம் தலைமைத்துவம் ஒன்றுதான்.
ஆயிரம் கை மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை.
எம் விடிவின் சூரியன் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.
அவதாரம் எப்போதும் அடிபணிந்து போகாது மறைவோ மரணமோ எல்லாமே மர்மம் தான்.
இருந்தால் தலைவன் இல்லையென்றால் இறைவன்.
எப்போதும் தமிழரின் குலசாமி அவர் தான்.
முப்பாட்டன் வழிவந்த முதல்வனும் அவர் தான் முப்படைக்கப்பால் பகைவர் படைக்கெல்லாம் எமனும் அவர் தான்
ஆயிரம்
ஆண்டுக்கு அப்பால் கலியுகத்தில்
ஓர் அவதாரம்.
கரி காலன்
சோழன் என
நிகழ் கால பெருஞ்சோழன்.
தமிழ் நிலம் ஆளும்
புலி வீரன்.
தமிழ்த்தாயின் கடைமகனாய்
தாங்க வண்ணா
துயர் துடைத்து
அரனும்
அணிகலனமாய் காவலர்க்கு
காவலனாய்
காத்து நின்ற காத்தவராயன்.
மொழியாய் இனமாய் ஒன்று இணைத்தவன் முடிந்தால் தொடடா
என்று உரைத்தவன் பகைவர் நடுங்கும்
சினம் படைத்தவன்.
தூங்கும் தமிழரை
தட்டி எழுப்பி
பாயும் புலியாய்
பகையை முடித்தவன் பகைக்கும் இரங்கும் நெஞ்சம் படைத்தவன் அன்பால் அணைத்தால் தன்னைக் கொடுப்பவன் தமிழை எதிர்த்தால் தீயாய் கொதிப்பவன்.
பார்வதி தந்த வேலவனாய்
தமிழுக்கும்
தமிழர்க்கும்
சேவகனாய் தன்னுயிர்
தந்த நாயகன்
வேங்கடன் வேலுப்பிள்ளை யின் இளைய மகன் எம்
தமிழ் தேசியத் தலைவன் பிரபாகரன்.
பெருமையும்
பேரின்பமும்
கொள்ளும் தினம்
எங்கள் தலைவன் அவதரித்த
பிறந்த தினம்.
கார்த்திகை
செல்வனாய்
போற்றுவோம்
வேலன் சரவணன்
இவன் என்று பாடுவோம். இந்நாள் தமிழுக்கு பொன்னாள் தமிழ்த்தாய் மனம் குளிர்ந்த நன்னாள் எம் தேசியத் தலைவரின் பிறந்தநாள்…
வே. புவிராஜ்…