
முல்லைதீவின் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் ரோகியங்க ஏதிலிகள் 103 பேருடன் படகொன்று இன்று வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது.
படகு திசைமாறி வந்தே கரையொதுங்கியுள்ளதாகவும் படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள், கடற்படையினர், மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
முன்னதாக உயிருக்கு போராடிய நிலையில் ஏதிலிகளது நாட்டுபடகு கடலில் திண்டாடிவந்திருந்த நிலையில் உள்ளுர் மீனவர்கள் தகவல் வழங்கியிருந்தனர்.
படகிலிருந்த ஏதிலிகளிற்கு உணவினை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருந்தனர். படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் இருந்ததாக தெரியவருகின்றது.
மியன்மார் இராணுவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுவரும் ரோகியங்க ஏதிலிகள் நாட்டைவிட்டு தப்பித்து செல்வது தொடர்கின்றது.
இந்நிலையில் கடந்த சிலவருடங்களிற்கு முன்னரும் ரோகியங்க ஏதிலிகள் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கி மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.