
2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச 4 விடுமுறை நாட்கள் காணப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு பிறக்கிறது.இதேவேளை, வெசாக் பௌர்ணமி 12 ஆம் திகதி மற்றும் நத்தார் பண்டிகை டிசம்பர் 25 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
