
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
அர்ச்சுனா எம்.பி நேற்று (29) விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அரசியலில் ஆர்வம் காட்டவில்லை
பின்னர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.