
அமெரிக்காவில் ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அது எப்போது கையெழுத்தாகும் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆங்கிலத்தை தேசிய மொழியாக நியமிப்பது ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. அரசாங்க நடவடிக்கைகளில் செயல்திறனை நிறுவுகிறது மற்றும் அமெரிக்க மக்களை இணைக்கும் ஒரு பாதையை உருவாக்குகிறது என்று வெள்ளை மாளிகை ஆவணம் கூறுகிறது.
அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மொழி நமது நாட்டின் மொழியாக இருந்து வருகிறது. சுதந்திரப் பிரகடனம் மற்றும் அரசியலமைப்பு போன்ற வரலாற்று ஆவணங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன» என்று கூறுகிறது.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் அங்கீகரிக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டது என்று அந்த ஆவணம் கூறியது.