
ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்கிறோம்:
ஜெர்மனியில் ஒரே நாளில் 23.03. அன்று எம்மவர் திரைப்படங்கள் இரண்டு வெளியாகின்றன.
ஒன்று ‹நாளைய மாற்றம்› Berlin நகரில்
இன்னுமொன்று ‹புஷ்பக 27› Stuttgart நகரில். இரண்டும் வெவ்வேறு வகைகளைச் சார்ந்தவை, சமூக நாடகம் (Socialdrama) மற்றும் விஞ்ஞானப் பயணத் திரைப்படம் (Space/Astronaut Film).
திரைப்படம் என்பது ஒரு குறிப்பிட்ட
வடிவம், வரைவிலக்கணத்துக்கள் அடங்கும் கலை அல்ல என்பது எனது புரிதல்.
ஒரு சில அறிவுயர்ச்சி பீதையில் பேசுபவர்கள், கலைப்படங்களை (Artmovies) அல்லது இருண்ட படங்களைத் (Darkmovies) தான் சிறந்த படைப்பாக சித்தரிப்பார்கள்.
ஆனால் சினிமா என்பது பலவித ரசனைகள் கொண்ட மக்களையும் சென்றடைய வேண்டும், அதனால் எல்லாவிதமான வகைகளையும்
உள்ளடக்க வேண்டும்.
நாம் இன்னும் நமது சினிமா உலகின் ஆரம்ப நிலையில்தான் உள்ளோம் என்று நான் உணர்கிறேன். நிச்சயமாக மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்…
சில படங்கள் தொழில்நுட்ப ரீதியாக நன்றாக உள்ளன, ஆனால் அவை பெரும்பான்மை (Mainstream) பார்வையாளர்களின் ரசனை நரம்பை அடைத் தவறி விடுகின்றன.
சில கதைகள் பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெறுகின்றன, ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அவை நன்றாக தயாரிக்கப்படவில்லை.
ஆனால், விமர்சனத்துக்கு பயந்து, படங்களை வெளியிடாமல் இருந்தால், நாம் எவ்வாறு முன்னேற முடியும்?
விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. ஆரோக்கியமான விமர்சனங்களை நாம் சுயவிமர்சனமாகக் கொண்டு, அடுத்த முறை மேலும் சிறப்பாக உருவாக்க உறுதியாக இருக்க வேண்டும். ஒரே ஒரு படத்திலேயே மிகச் சிறப்பாக செய்ய முடியாது, ஒருவேளை இரண்டாவது அல்லது மூன்றாவது படமே நம் படப்பை உயர்த்தக்கூடும்.
அதனால், மக்களிடம் நாங்கள் பொறுமையை எதிர்பார்க்கிறோம். நாங்கள் செய்யும் முயற்சிகளை புரிந்து கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏனேனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல;
திரைப்பட உலகம் என்பது ஒரு சமூகத்தின் வரலாற்றை, மொழியைப் பேசும் இடம்;
அது ஒரு கலாச்சாரத்திலிருந்து மற்றொன்றிற்கு பாலமாக செயல்படும்.
ஒரு கலாச்சாரத்தை மற்றொரு கலாச்சாரத்திற்கு அறிமுகப்படுத்தும்.
வெளிநாட்டில் வாழும் பல தமிழ் குழந்தைகள் ( Tamil Diaspora) தங்கள் அடையாளத்தைக் கண்டுபிடிக்க முற்படுகிறார்கள், அவர்களுக்கு எம்மவர் திரைப்படங்கள் கூட உதவியாக இருக்கக் கூடும். இப்போது பல எம்மவர் திரைப்படங்கள் எங்கள் கலாச்சாரத்தின் பல்வேறு பரிமாணங்களை காட்டுகின்றன.
எங்கள் படங்களைப் பார்த்து, ஆதரிக்க அனைவரும் வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்! அன்புடன் அழைக்கின்றோம்! நன்றி