
மட்டக்களப்பு மாவடிச்சேனையில் இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து.
சில மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள இலத்திரனியல் சாதனங்கள் விற்பனை செய்யும் அஷ்ரப் என்பவருக்குச் சொந்தமான கடையிலேயே நேற்றிரவு இத்திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்னெழுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.