
பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் ரெஜி செல்வராசா ஒளிப்பதிவில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் கடந்த வருடம் வெளியான ‘மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது.
இந்தத்திரைப்படத்தில் சபேசன் சண்முகநாதன், தீப்திகா, விதுர்சன் கணேஸ், கிருஸானிகா, ரூபன் சிவா, தனுஜா, திருமலை பிரணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அலெக்ஸ் கோபி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.