
இருக்கின்றது.
நித்தமும்
மனிதக் காதலையே பாடுவதை
திறனாய்
கொண்டோரே கொஞ்சம்
தேசக்
எல்லாம்
முடிந்ததாய் தான்
எங்கள்
எல்லோரது நினைப்பும்.
எல்லாமே
முடித்து விட்டதாய் தான்
வேட்டை
நாய்களின் நினைப்பும்.
உலகமும்
இலங்கை அரசும் திரை போட்டு
மறைக்கலாம்
ஆனாலும் தமிழன் மனத் திரைகளில்
அன்றைய
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே
இருக்கின்றது.
மறந்தவர்
எவரேனும் உள்ளார் எனில்
அவர்கள்
இறந்தோர்க்கு சமமானவர்களே..!
ஈரமற்ற
ஒரு சாரார் சோரம் போயிருக்கலாம்
ஆனாலும்
அவர்களுக்காகவுமே உயிர்க் கொடைகள்
நிகழ்ந்தன..!
எங்கள்
கண்களின் ஓளிப்பதிவில் அன்றைய
காட்சிகள்
மட்டுமா பதிவாகியிருந்தன கூடவே
ஒலங்களின்
ஒலிப்பதிவுமல்லவா பதிவாகியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால்
அழியாத
ஆவணப் பதிவாச்சு ஆனாலும் தீர்வில்லா
வினாவாச்சு.
அள்ளிக்
கொடுத்த வலிகள் ஆறாத இரணமாச்சு.
துரோகங்கள்
மட்டுமே அடையாளச் சின்னமாச்சு
வதைபட்ட
வரலாறும் சிதைபட்ட விடுதலையின்
வீரியமும்
அடிபட்ட இனம் மறந்து தான் போயிடுமா?
விழி
நீர் துடைத்து எழுவோமா இல்லை
பழிகளை
சுமந்தவர்களாக வாழ்ந்து மடிவோமா?
———
தயாநிதி தம்பையா
பிரான்ஸ்.
4.05.25.