
ஒரு
கொடியின் பூக்களை இரும்பர்கள்
கொய்தனர்.
விடுதலையின்
கனவோடு வாழ்ந்தவரை இரக்கமின்றி
அழித்தனர்..
பயங்கரவாதம்
எனும் அபாண்டப் பழி சுமத்தி அண்டப்
புழுகுகளோடு
அண்டத்தையே அழைத்தனர் அழித்தனர்..
கொள்ளிக்கும்
ஆளில்லாமல் நாய்களுக்கும்
பேய்களுக்கும்
நடு வீதியிலேயே பிண விருந்து வைத்தனர்..
கேட்கவோ
மீட்கவோ யாருமின்றி பாதி உயிர்
போன பின்பும்
மீதி உயிரைக் காத்திடவே
வீதியிலே
புரண்டழுதோம். உலகமும் ஊனமுற்றுத் தான்
இருந்தது..
நாதியற்ற
இனமாய் நாடற்று வீடற்று
கால்நடைகள்
போன்றே கரை ஒதுங்கினோம்.
ஊரை
மறந்தவரும் உரியவர் பேரை
மறந்தவரும்
நடந்த போரையுமல்லவா மறந்து போனோம்.
அடையாளம்
இழக்கின்ற இனமாகி மனம் போன
போக்கிலே
இடுகாடும் இல்லாமல் ஓடிக் கொண்டே
இருக்கின்றோம்.
உள்ளம்
விம்மியழ உதட்டில் கள்ளப் புன்னகையுடன்
நடைப் பிணங்களாய்
இன்று வரை ஏதிலிகளாய் அலைகின்றோம்.
வாழ்கை
என்பது ஞாபகப் பொட்டலமே..!
வலிகளுக்கு
நிவாரணம் தேடிட முடியாமல் நினைவுகளூடன்
நகர்கின்றோம்..