
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் – வந்தால் முதலமைச்சர் வேட்பாளர்களாக வர தகுதியுள்ளவர்கள் பற்றிய ஒரு பார்வை:
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாகாண சபைத் தேர்தலையொட்டி, முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர்களாக திரு. எம்.ஏ. சுமந்திரன் வடக்கிலும் மற்றும் திரு. சாணக்கியன் ராசமாணிக்கம் கிழக்கிலும் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் மக்கள் மத்தியில் உள்ளுராட்சி தேர்தல் மூலம் ஒரு நல்ல பேசு பொருளாக இருக்கின்றன என்பது இந்த காணொலி வாயிலாக தெரிகிறது.
ஆய்வாளர் யோகராசா தேர்தலும் மக்களின் மனநிலையை விளக்கி உள்ளார்.தயவு செய்து எல்லா அரசியல் கட்சிகளும் இந்த காணொலியை பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=Bho6m6mp7m8
இவர்கள் இருவரும் அரசியல் அனுபவம், தெளிந்த நோக்கு, மற்றும் கட்சியின் நலனுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளுராட்சி தேர்தலில் மக்களின் ஆதரவைத் தெளிவாக பதிவு செய்துள்ளனர்.இது, சுயநிர்ணய உரிமை, அதிகாரப் பகிர்வு, மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் அரசியல் பாதையை மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கான நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல்கள், நீண்ட காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்த வடக்கு மற்றும் கிழக்கில், அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார மறுமலர்ச்சியையும் உருவாக்கும் ஒரு முக்கிய தொடக்கமாக இருக்கக்கூடியவை.
பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் பரந்த சமூகங்கள் இந்த முயற்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம், தமிழர் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமையை உருவாக்கவும்,பொருளாதார வளர்ச்சியை அடையவும் நமது கூட்டு எதிர்காலத்தைக் காக்கவும் இது ஒரு முக்கியமான பயணமாகும்.
இந்த முன்னெடுப்பை இவர்கள் இருவரும் உற்சாகமாகவும் மேலும், 13வது திருத்தத்தை முழுமையாக
அமுல்படுத்துவதற்கும், மாகாண சபைகள் வழியாக நேர்த்தியான அரசியல் தீர்வ கொண்டு வருவதற்கும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துடனும், மற்றும் பிற கட்சிகளுடனும் அர்த்தமுள்ளஉரையாடல்களும், நேர்மையான பரஸ்பர பங்களிப்பும் அவசியம்என்பதை நடந்து முடிந்த தேர்தலில்அதிகளவு வாக்குகளைப்பெற்ற கட்சியின் பொறுப்புள்ளஉறுப்பினர்களாயிருப்பதுடன் தென்னிலங்கை கட்சியினருடன்தெளிந்த தொடர்பாடல்களை மேற்கொள்ளும் மொழிப்புலமைகொண்டவர்கள் என்றமட்டில், இப்பணியை முன்னெடுத்துச் செல்லதிரு. M.A. சுமந்திரனும், சாணக்கியனும் மற்றும் கட்சிகளையும் இணைத்து
பயணிப்பார்கள் என்ற தகுதிக்கு மக்களின் ஆதரவு உள்ளது என தெரிகின்றது.
நன்றி.
ராஜ் சிவநாதன்.