
தென் தமிழீழம் , மட்டக்களப்பில் தமிழின அழிப்பு வாரம் நிகழ்வு 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்கு சிவிலுடையில் வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம், வீடியோ எடுத்ததற்காக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார்.
தமிழின அழிப்பு வாரம் திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் சிங்கள பேரினவாத அரசினால் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழின அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது அங்கு சிவில் உடையில் வந்த சிங்கள பேரினவாத அரசின் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்படும் ஒருவர் நிகழ்வினையும் நிகழ்வில் வந்தவர்களையும் புகைப்படம் எடுத்ததுடன் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் வந்தவர்களையும் வீடியோ செய்யும் நடவடிக்கையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.
சிங்கள பேரினவாத அரசு சர்வதேச துணையுடன் நடத்திய தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட எங்கள் உறவுகளை நினைவுகூரும் நிகழ்வினை நடாத்திக்கொண்டிருக்கும்போது இங்குவந்து சிங்கள பொலீசார் புகைப்படம் எடுத்து மக்களை அச்சுறுத்துல் செய்கின்றனர்
ஆட்சிகள் மாறினாலும் ஆட்கள் மாறினாலும் தமிழ் மக்களை அச்சுறுத்தும் சிங்கள பேரினவாத அரசின் அச்சுறுத்தல் மட்டும் மாறவில்லை .