Skip to content
Mai 15, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • Mai
  • 15
  • சர்வதேச சமூகம் தலையீட்டை கோரியுள்ள தமிழ் தேசிய பேரவை
  • தாயக செய்திகள்

சர்வதேச சமூகம் தலையீட்டை கோரியுள்ள தமிழ் தேசிய பேரவை

ஈழத்தமிழன் Mai 15, 2025
WhatsApp Image 2025-05-14 at 20.49.20_9a73175c

வடக்கில் தமிழர்களின் நில இருப்பை உறுதிபடுத்த சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டைக்கோரி  தமிழ் தேசிய பேரவையினருக்கும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் கொழும்பில் இன்றைய தினம் புதன்கிழமை  இடம்பெற்றது .

தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  பொதுச் செயலாளர் செல்வாராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன், 

தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் குறித்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

சந்திப்பு தொடர்பில், தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், 

தமிழ் தேசிய பேரவையின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் முதலாவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக்கையும் தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் கலாநிதி பாண்டே யுடன் சந்திப்பு இடம்பெற்றது. 

மூன்றாவதாக ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிடப்பிரதிநிதி மகான்ரே பிறஞ்சேயுடன் இடம்பெற்றது. 

தொடர்ந்து பிற்பகல் 3.00 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகருடன் அவரது இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பொழுது கடந்த 2025 மார்ச் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் வவுனியா தவிரந்த நான்கு மாவடங்களில் சுமார் 6000 ஏக்கர் காணியை அரச காணியாக சுவீகரிக்கும் அரசின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக நாம் எமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தோம். 

மூன்று மாத காலத்தில் மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து உரித்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த நிலைப்பாட்டினை அரசு மீள பெறவேண்டும் என வலியுறுத்தினோம். 

வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர்வுகள் காரணமாகவும் போர் அழிவுகள் காரணமாகவும்   பெருமளவு மக்களின் சொந்தமான காணி ஆவணங்கள் சொத்துக்கள் இழக்க வேண்டி ஏற்பட்டது. 

அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை இழந்தார்கள். ஆகவே ஆவணங்களை உறதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம். 

போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பரம்பல் புலம்பெயர்ந்துள்ளது. 

இந்தியாவில் 1 லடச்த்திற்கும் மேற்பட்ட எமது ஈழ தமிழர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகாரமின்றி வாழுகின்றனர் அவர்கள் அங்கு அங்கீகரிக்கப்படபோவதுமில்லை.

இவ்வாறான நிலையில் அந்த மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு வருகை தரவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் இங்கே வாழ முடியாத சூழல் உருவாகும் இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்திய தூதுவரையும் சந்தித்தோம் 

இந்த மக்கள் அரசின் பயங்கரவாத அச்சுறுத்தல் மூலமே நாட்டினை விட்டு வெளியேறினார்கள். 

இந்நிலையில் அரசு இந்த வர்த்தமானியை வெளியிட்டதன் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பதல்ல. மாறாக மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக  சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக உள்ளது.

ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரித்துக்கள் வழங்கவேண்டும் என்பதில் மாற்றுகருத்திற்கு இடமில்லை இந்த வர்த்தமானி மூலம் மேற்கொள்ளப்படுகின்ற விட்டத்தினை முற்று முழுதாக ஏற்றுகொள்ள முடியாது. எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படல் வேண்டும். 

அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

இரண்டாவது விடயம் குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தின்குச்  சொந்தமான  79 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேலதிகமாக  325 ஏக்கர் காணியினை விகாரைக்குரிய புத்த பிக்கு கோரியிருந்தார்.   

ஆனால் அக்காணிகள் தொல்பொருளுட் திணைக்களத்தின்கு சொந்தமானதல்ல என்ற அடிப்படையிலும் அப்பகுதியில் பெருமளவு விவசாயிகளது விவசாய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு மறுக்கப்பட்டிருந்தது. 

எனினும் பிக்குவும் தொல்பொருட் திணைக்களத்தினரும் பொலீசாரது ஒத்துழைப்புடன் சொந்தக் காணியில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இருவரையும் கைதுசெய்து  உளவு இயந்திரத்தையும் நீதிமன்றில் நிறுத்தி நீதிமன்றின் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் . 

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் விடுவிக்கவேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கூறியிருந்தார். 

அவ்வாறு சனாதிபதி முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்வு எட்டபட்ட பின்னரும் அத்தீர்மானத்தையும் மீறி  இன்றும் கூட அந்த வளாகத்தில் உள்ள குளத்தில் மீன்பிடி தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயத்திற்கு  குறித்த நீரை பயன்படுத்த தடையையும் விதித்து விவசாயமும் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ்விடயத்தில் தலையிட்டு சனாதிபதி ரணில் இணங்கியவாறு குறித்த 325 ஏக்கர் நிலத்தையும் தொல்பொருட் திணைக்களம் விடுவிக்கவும் பிக்குவின் அடாவடியை கட்டுப்படுத்தவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. 

மூன்றாவது விடயமாக தையிட்டி சட்டவிரோதமான விகாரை தொடர்பில் பேசியிருந்தோம் . சட்டவிரோதமான விகாரை என்று தெரிந்தும் இன்னமும் அந்த காணிகளின் உரிமையாளர்களிடம் வழங்காது அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றது.

தையிட்டி விகாரை சட்டவிரோதமானது தொல்பொருளுடன் தொடர்பு அற்றது  சட்டவிரோதமாக கட்டப்பட்டது அகற்றபட்டே ஆகவேண்டும் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். 

ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தும் மைய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா என்பன இருக்கின்றன ஐக்கிய நாடுகள் சபைக்கு இது தொடர்பில் பங்கு இருப்பதால் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியிடமும் இவ்விடயத்தில் அவரது தலையீட்டை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார். 

Continue Reading

Previous: அருச்சுனா:கடைசி காலம்!
Next: யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் » நினைவாயுதம்»

Related Stories

attak
  • தாயக செய்திகள்

திருகோணமலையில் மாணவர்களுக்கிடேயே மோதல்! மாணவன் வைத்தியசாலையில்!!

ஈழத்தமிழன் Mai 15, 2025
3443
  • தாயக செய்திகள்

தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார்.

ஈழத்தமிழன் Mai 15, 2025
45 (7)
  • தாயக செய்திகள்

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் » நினைவாயுதம்»

ஈழத்தமிழன் Mai 15, 2025

நிகழ்வுகள்

Beige Grün Illustrativ Modern Frohe Ostern Foto Karte (1) (1)
  • நிகழ்வுகள்

அமரர் முல்லை மோகன் அவர்களின் நினைவு வணக்கம்.27.04.2025 நடைபெற்றது

ஈழத்தமிழன் April 29, 2025
தமிழ் எம் ரியின் விருது விழா 26 4 2025 9c46b320-6ac4-4f26-a27e-271658966791

தமிழ் எம் ரியின் விருது விழா 26 4 2025

April 21, 2025
உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் newyear

உலகத்தமிழர் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

April 14, 2025

துயர் பகிர்தல்

dila
  • துயர் பகிர்தல்

யாழ் சிறுப்பிட்டிப்பகுதியில் இன்று அதிகாலை 22 வயது யுவதி மரணம்!

ஈழத்தமிழன் Mai 13, 2025
முதல் மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்! 232b2995-b2d5-4774-805a-a7ae4d830ec4

முதல் மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்!

Mai 13, 2025
துயர் பகிர்தல் இளைப்பாறிய உதவி அதிபர். செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025 thuyar sample 2

துயர் பகிர்தல் இளைப்பாறிய உதவி அதிபர். செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12.05.2025

Mai 12, 2025

உலக செய்திகள்

_vijay_thani
  • உலக செய்திகள்
  • நினைவில்

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம்

ஈழத்தமிழன் Mai 15, 2025
துருக்கியில் புடினுக்காக காத்திருப்பேன் என்கிறார் ஜெலென்ஸ்கி zelenkyy

துருக்கியில் புடினுக்காக காத்திருப்பேன் என்கிறார் ஜெலென்ஸ்கி

Mai 15, 2025
அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் 28 வயது இலங்கை இளைஞன் பலி!! vipa

அவுஸ்திரேலியாவில் நடந்த கோர விபத்தில் 28 வயது இலங்கை இளைஞன் பலி!!

Mai 12, 2025

திரைப்பக்கம்

496178054_1261952985940723_2512337484121618686_n
  • திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

ஈழத்தமிழன் Mai 7, 2025
மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் 494236995_1134410338488663_7376974997004415390_n

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

April 30, 2025
சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்! Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

April 24, 2025

நினைவில்

_vijay_thani
  • உலக செய்திகள்
  • நினைவில்

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம்

ஈழத்தமிழன் Mai 15, 2025
மல்லாகத்தில் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சி! mallakam mulli

மல்லாகத்தில் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சி!

Mai 14, 2025
வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 ) mulli

வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு நிலையங்களிற்கு அழைத்து சென்ற சிங்கள இராணுவம்(04.05.2009 )

Mai 4, 2025

ஆக்கங்கள்

495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

ஈழத்தமிழன் Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025

விளையாட்டு

34
  • விளையாட்டு

IPL போட்டிகள் ஒத்திவைப்பு

ஈழத்தமிழன் Mai 9, 2025
இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் Fielding-Coach-R-Sridhar-1-696x464

இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு களத்தடுப்பு பயிற்சி வழங்க இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர்

Mai 7, 2025
4ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் இளையோரிடம் இலங்கை தோல்வி Bangladesh-U19-tour-of-Sri-Lanka-2025-1-696x464

4ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் இளையோரிடம் இலங்கை தோல்வி

Mai 4, 2025

மருத்துவம்

chichen
  • மருத்துவம்

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

ஈழத்தமிழன் März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு! Cancer Vaccine (1)

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு!

Dezember 19, 2024

You may have missed

attak
  • தாயக செய்திகள்

திருகோணமலையில் மாணவர்களுக்கிடேயே மோதல்! மாணவன் வைத்தியசாலையில்!!

ஈழத்தமிழன் Mai 15, 2025
_vijay_thani
  • உலக செய்திகள்
  • நினைவில்

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம்

ஈழத்தமிழன் Mai 15, 2025
3443
  • தாயக செய்திகள்

தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார்.

ஈழத்தமிழன் Mai 15, 2025
45 (7)
  • தாயக செய்திகள்

யாழ் . பல்கலையில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் » நினைவாயுதம்»

ஈழத்தமிழன் Mai 15, 2025

திரைப்பக்கம்

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது 496178054_1261952985940723_2512337484121618686_n

யாழ்ப்பாணத்தில் ‘கர்மா’ குறும்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது

Mai 7, 2025
மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் 494236995_1134410338488663_7376974997004415390_n

மைனர்‘ படத்தின் மூலம் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

April 30, 2025
சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்! Rot und Schwarz Dark Gamer Sport YouTube-Banner (1)

சுபர்த்தனா படைப்பகம் வெளியிடவுள்ள *கோபக்காரி* பாடல்!

April 24, 2025
மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது. 493315550_1129137239015973_393126362438432861_n (1)

மூக்குத்திப்பூ‘ திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி கனடாவில் திரையிடப்படவுள்ளது.

April 23, 2025
கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் நன்றிளை .மன்மதன் பாஸ்கி. 465788115_8983115911719296_5980924971419374518_n

கெளரவ விருது வழங்கிய உதயன் பத்திரிகைக்கும் நன்றிளை .மன்மதன் பாஸ்கி.

April 23, 2025
என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்கள்: பாடலாசிரியர் அஸ்மின் 491955451_1209557073900743_1717215507657787331_n

என் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்கள்: பாடலாசிரியர் அஸ்மின்

April 22, 2025
Mai 2025
M D M D F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
« Apr    
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.